ரூ.12,000 அதிகம்.. இதுதான் OnePlus 13s போனின் விலை.. போட்டு உடைத்த டிப்ஸ்டர்.. ஜூன் 5 அறிமுகம்!
ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஜூன் 5 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும்.
அதாவது ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனிற்கும் ஒன்பிளஸ் 13எஸ் மாடலுக்கும் பெயர் அடிப்படையிலான வேறுபாடு இருக்குமே தவிர, அம்சங்கள் அடிப்படையில் "பெரும்பாலும்" எந்த மாற்றமும் இருக்காது. இதன்மூலம், இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்பிளஸ் டி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இனிமேல் சீனாவிற்கு பிரத்யேகமானதாக இருக்கும் என்பதையும், அதே பெயரின்கீழ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது!

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக (மினி ஸ்மார்ட்போனாக) இருக்கும் என்பதும், இதில் அலெர்ட் ஸ்லைடருக்கு பதிலாக புதிய பிளஸ் கீ உடன் வரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்.. நம்பகமான டிப்ஸ்டர் ஒருவர் வழியாக, ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் லீக் செய்யப்பட்டுள்ளது!
டிப்ஸ்டர் யோகேஷ் பிரார், 91 மொபைல்ஸ் (91Mobiles) உடன் இணைந்து லீக் செய்துள்ள தகவலின்படி, ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் சுமார் ரூ.55,000 ஆக இருக்கலாம். டிப்ஸ்டரின் இந்த கூற்று துல்லியமானதாக இருந்தால்.. ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடலை விடரூ.12,000 அதிக விலை உள்ளதாகவும், ஒன்பிளஸ் 13 மாடலை விட விலை குறைவானதாகவும் இருக்கும்
நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில், ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.42,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ரூ.69,999 அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.55,000 என்பது ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருந்தால்.. ஹை-எண்ட் ஆப்ஷனின் விலை ரூ.60,000 க்கும் அதிகமான விலை நிர்ணயத்தை பெற வாய்ப்புள்ளது.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெறும் புதிய பிளஸ் கீயை பொறுத்தவரை இது ஒன்பிளஸ் ஏஐ அம்சங்களை உள்ளடக்கிய கீ ஆக இருக்கும். இவற்றில் - ஒன்பிளஸ் ஏஐ வாய்ஸ் ஸ்க்ரைப் அம்சமும் அடங்கும், இது மெசேஜ் அனுப்புதல் மற்றும் ஆன்லைன் மீட்டிங் ஆப்களுக்குள் கால்கள் மற்றும் மீட்டிங்களை ரெக்கார்ட் செய்ய, அதை சம்மரைஸ் செய்ய மற்றும் மொழிபெயர்க்க அனுமதிக்கும்.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ், 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ், டால்பி விஷன் உடனான 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்கொண்டு இயக்கப்படலாம்
இதன் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா, 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா பேக் செய்யப்படலாம். முன்பக்கத்தில் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்) இருக்கலாம்.
பேட்டரியை பொறுத்தவரை இது 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6260mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இது இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கலாம். கடைசியாக இது அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ மற்றும் 185 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








