அடிச்சான் பாரு.. OnePlus 13s இந்திய விலை இவ்ளோ தானா.. ஆர்டர் அள்ள போகுது!
ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus) ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவில் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) என்கிற பெயரின் கீழ் அறிமுகமான மாடலின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அறியாதோர்களுக்கு, ஒரே அம்சங்களுடன் வெவ்வேறு மாடல் பெயர்களின் கீழ் வெவ்வேறு சந்தைகளில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களை தான் ரீபிராண்டட் வெர்ஷன் என்பார்கள். இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் மாடல் ஆனது ஒன்பிளஸ் 13 சீரீஸின் கீழ் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய இரண்டிற்கும் இடையில் நிலைநிறுத்தப்படும்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் அறிமுகம் மிகவும் நெருக்கமாக உள்ள நிலையில், இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விலை (OnePlus 13s Launch Price in India) சுமார் ரூ. 50,000 ஆக இருக்கலாம் என்றும், இதே மாடல் அமெரிக்காவில் $649 ஆகவும், துபாயில் வாங்குபவர்களுக்கு AED 2,100 ஆகவும் இருக்கலாம் என்றும் தகவல் லீக் ஆகியுள்ளது.
சீனாவில் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி உள்ளது? ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.39,805 க்கு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.42,150 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.44,490 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.46,835 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக உள்ள ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.52,690 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே
- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)
- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்
- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 4 மைக்ரோஃபோன்கள்
- டால்பி அட்மாஸ்
- அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ
- எடையில் 185 கிராம்.


Click it and Unblock the Notifications








