வாடா குட்டி பையா.. ரூ.5000 ஆபர் விலையில் OnePlus 13s விற்பனை.. இன்று முதல் ஆரம்பம்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலானது, இன்று முதல் (அதாவது ஜூன் 12 முதல்) இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. சிறிய வடிவமைப்பு, பிரீமியம் கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன? எங்கெல்லாம் வாங்க கிடைக்கும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் 13எஸ் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது மூன்று கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது: பிங்க் சாடின் (Pink Satin), பிளாக் வெல்வட் (Black Velvet) மற்றும் க்ரீன் சில்க் (Green Silk). இது ஒன்பிளஸ்.இன் (OnePlus.in), ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் (OnePlus Store App), அமேசான் இந்தியா (Amazon.in), ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் (OnePlus Experience Stores) மற்றும் பல ரீடெயில் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் 13எஸ் விலை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்ன்ல் ஸ்டோஎஜ் ஆப்ஷன் ரூ.59,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13எஸ் சலுகை விவரங்கள்: ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் (முன்பதிவு செய்தவர்களுக்கு) ரூ.2099 மதிப்புள்ள ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3-ஐ இலவசமாக பெறுவார்கள். மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் ரூ.5000 உடனடி தள்ளுபடியை பெறலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் கிடைக்கும். மேலும் தங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.5000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள கஸ்டமைஸ் செய்யக்கூடிய பிளஸ் கீ பற்றிய விவரங்கள்: இதை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் ரிங், வைப்ரேட் மற்றும் சைலண்ட் மோடுகளுக்கு இடையில் மாறலாம். கேமராவை திறப்பது, ஸ்க்ரீனில் உள்ள டெக்ஸ்ட்-ஐ மொழிபெயர்ப்பது அல்லது ஃப்ளாஷ்லைட்டை இயக்குவது போன்ற குவிக் அக்சஸ்-களுக்கும் இதை கஸ்டமைஸ் செய்யலாம். இதைக்கொண்டு ஏஐ பிளஸ் மைண்ட் ஸ்பேஸ்-ஐயும் (AI Plus Mind Space) தொடங்க முடியும்.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள மைண்ட் ஸ்பேஸ்-ஐ பயன்படுத்தி கட்டுரைகள், புகைப்படங்கள், சாட்கள் மற்றும் அட்டவணைகள் போன்ற தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து, அவற்றை எளிதாக நேவிகேட் செய்யலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஏஐ டீட்டெயில் பூஸ்ட் (AI Detail Boost), ஏஐ அன்பிளர் (AI Unblur), ஏஐ ரெஃப்ளெக்ஷன் ஏரேசர் (AI Reflection Eraser), AI Reframe மற்றும் பல ஏஐ-ஆதரவு இமேஜிங் டூல்களும் உள்ளன. AI Translation, AI VoiceScribe, AI Call Assistant, AI Search, அத்துடன் Google இன் Circle to Search அம்சம் மற்றும் Google Gemini போன்ற ஏஐ அம்சங்களுக்கான ஆதரவும் இதில் உள்ளது.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- Aqua Touch 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)
- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
-டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, NavIC உடன் கூடிய GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- அளவீட்டில் 150.8×71.7×8.2மிமீ
-எடையில் 185 கிராம்


Click it and Unblock the Notifications








