Home
Mobile

ஜூன் 5 வரை அள்ளிக்கோங்க.. ரூ.199 க்கு ரூ.2499 கிஃப்ட்.. OnePlus 13s மீது Bonus Drop Purchase அறிவிப்பு!

ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஜூன் 5 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கிடையில் அதே ஜூன் 5 ஆம் தேதி வரை நடக்கும் ஒன்பிளஸ் 13எஸ் போனஸ் ட்ராப் பர்சேஸ் (OnePlus 13s bonus drop purchase) என்கிற சிறப்பு சலுகையையும் அறிவித்துள்ளது

இந்த ஒன்பிளஸ் 13எஸ் போனஸ் ட்ராப் பர்சேஸ்-ன் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.2000 வரை மதிப்பிலான ஒன்பிளஸ் கிஃப்ட்களை பெற முடியும். இது 3 சுற்று விற்பனைகளாக நடக்கும். இதில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சுற்று விற்பனையிலும் 300 ரெட்காயின்களை கொண்டு அற்புதமான பரிசுகளை பெறலாம்.

OnePlus 13s மீது Bonus Drop Purchase அறிவிப்பு!

நீங்கள் ஒன்பிளஸ் போனஸ் டிராப்பை வெற்றிகரமாக வாங்கியவுடன் 300 ரெட்காயின்ஸ் உடனடியாக உங்களுடைய ஒன்பிளஸ் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு பயனரும் ரூ.199 க்கு ஒன்பிளஸ் 13எஸ் போனஸ் டிராப்பை வாங்கலாம்.

ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி அனைத்து போனஸ் டிராப்களிலும் பங்கேற்க ஒவ்வொரு பயனருக்கும் 1 வாய்ப்பு மட்டுமே இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் முதல் சுற்றில் பங்கேற்று போனஸ் டிராப்பை வாங்கினால், இரண்டாவது அல்லது மூன்றாவது போனஸ் டிராப்களில் பங்கேற்க முடியாது.

Take a Poll

ஒன்பிளஸ் 13எஸ் போனஸ் டிராப் பர்ச்சேஸ்-ன் கீழ் என்னென்ன பரிசுகள் கிடைக்கும்? முதல் சுற்றில் நீங்கள் டஃபிள் பேக் (ரூ. 2,499 மதிப்புள்ள) + 300 ரெட்காயின்களை வெல்லலாம். இரண்டாவது சுற்றில், வெற்றியாளர்கள் ஒரு காபி டம்ளர் (ரூ. 999), ஒன்பிளஸ் நெவர் செட்டில் கேப் (ரூ. 1,099 மதிப்புள்ள) மற்றும் டிராவல் பௌச் (ரூ. 899) + 300 ரெட்காயின்களை வெல்லலாம்.

மூன்றாவது சுற்றில், பயனர்கள் புதிய ஃப்ரீசிங் பாயிண்ட் 27W கூலர் + 300 ரெட்காயின்களை வெல்லலாம். ஒன்பிளஸ் போனஸ் டிராப் பர்ச்சேஸ்கள் திரும்ப பெற முடியாதவை மற்றும் மாற்ற முடியாதவை என்பதை கவனத்தில் கொள்ளவும். மேலும், கிஃப்ட் கோட்-ஐ ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரிடீம் செய்ய வேண்டும்,

ஒன்பிளஸ் 13எஸ் போனஸ் டிராப் பர்சேஸ் விற்பனை தேதிகள்"
1 சுற்று விற்பனை: மே 20 ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் மே 27 ஆம் தேதி காலை 11:30 மணி வரை
2 ஆம் சுற்று விற்பனை: மே 27 ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் ஜூன் 3 ஆம் தேதி காலை 11:30 மணி வரை
3 ஆம் சுற்று விற்பனை: ஜூன் 3 ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் ஜூன் 5 ஆம் தேதி காலை 11:30 மணி வரை

ஒன்பிளஸ் 13எஸ் என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே

- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)

- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்

- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 4 மைக்ரோஃபோன்கள்
- டால்பி அட்மாஸ்
- அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ
- எடையில் 185 கிராம்.
- இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விலை சுமார் ரூ. 50,000 ஆக இருக்கலாம்

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13s bonus drop purchase until June 5th Price gifts sale date timings all you need to know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X