1 இல்ல.. 5 ஆப்ஷன் இருக்கு.. ரூ.54,999 OnePlus 13s க்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்?
ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.59,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் பிளாக் வெல்வெட், க்ரீன் சில்க் மற்றும் பிங்க் சாடின் 3 ஆகிய கலர்களில் ஜூன் 12 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.5,000 உடனடி தள்ளுபடியும், பழைய ஸ்மார்ட்போனை கொடுப்பவர்களுக்கு ரூ.5,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும், 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் சேர்ந்தும் கூட ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை உங்கள் பட்ஜெட்டிற்குள் கொண்டு வரவில்லை என்றால் அல்லது ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஓவர் பிரைஸ்டு ஆக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால்.. நிச்சயம் ஒன்பிளஸ் 13எஸ்-க்கான ஆல்ட்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஒன்பிளஸ் 13எஸ் க்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்பதை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
ஒன்பிளஸ் 13எஸ்-க்கான டாப் 5 ஆல்ட்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்கள்:
1. ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16e)
2. ஐக்யூ 13 (iQOO 13)
3. ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R)
4. நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro)
5. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro)
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- Aqua Touch 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)
- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
-டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, NavIC உடன் கூடிய GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- அளவீட்டில் 150.8×71.7×8.2மிமீ
-எடையில் 185 கிராம்
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய பிளஸ் கீ உள்ளது: இதை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் ரிங், வைப்ரேட் மற்றும் சைலண்ட் மோடுகளுக்கு இடையில் மாறலாம். கேமராவை திறப்பது, ஸ்க்ரீனில் உள்ள டெக்ஸ்ட்-ஐ மொழிபெயர்ப்பது அல்லது ஃப்ளாஷ்லைட்டை இயக்குவது போன்ற குவிக் அக்சஸ்-களுக்கும் இதை கஸ்டமைஸ் செய்யலாம். இதைக்கொண்டு AI Plus Mind Space-ஐயும் தொடங்க முடியும்.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள மைண்ட் ஸ்பேஸ்-ஐ பயன்படுத்தி கட்டுரைகள், புகைப்படங்கள், சாட்கள் மற்றும் அட்டவணைகள் போன்ற தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து, அவற்றை எளிதாக நேவிகேட் செய்யலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் AI Detail Boost, AI Unblur, AI Reflection Eraser, AI Reframe மற்றும் பல ஏஐ-ஆதரவு இமேஜிங் டூல்களும் உள்ளன. AI Translation, AI VoiceScribe, AI Call Assistant, AI Search, அத்துடன் Google இன் Circle to Search அம்சம் மற்றும் Google Gemini போன்ற ஏஐ அம்சங்களுக்கான ஆதரவும் இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications