OnePlus 13R: இன்னைக்கு சம்பவம் இருக்கு மாப்ள.. 6000mAh பேட்டரி.. SONY கேமரா.. பீச்சர், விலை எப்படி இருக்கும்?
இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் பிரியர்களுக்கு இன்று முக்கியமான நாளாக இருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஒன்பிளஸ் 13 சீரிஸ் அறிமுகம் (OnePlus 13 Series Launch) இன்று நடக்க இருக்கிறது. இதில் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) போன் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஏனென்றால், இந்த போன் ஒன்பிளஸ் 13 மாடலைவிட மலிவான விலையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பீச்சர்களை கொடுக்க இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 13ஆர் போனின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் இரவு 9 மணிக்கு ஒன்பிளஸ் லாஞ்ச் இவெண்ட் தொடங்குகிறது. இதில் ஒன்பிளஸ் 13ஆர் மட்டுமல்லாமல், ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus 13) வெளியாக இருப்பது உறுதியாகிவிட்டது. மேலும், ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2), ஒன்பிளஸ் வாட்ச் 3 (OnePlus Watch 3) போன்ற கேஜெட்டுகள் வெளியாக இருப்பதாக தெரிகிறது.

இதில் நாம் பார்க்க் இருக்கும் ஒன்பிளஸ் 13ஆர் போனின் டிஸ்பிளே, சிப்செட், கேமரா பேட்டரி மற்றும் ஓஎஸ் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல கலர் வேரியண்ட்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மார்கெட்டில் கசிந்துவிட்டன. முதலில் உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.
ஒன்பிளஸ் 13ஆர் அம்சங்கள் (OnePlus 13R Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பிஓஈ எக்ஸ்2 (BOE X2) டிஸ்பிளே மாடலாகும். இந்த பிரீமியம் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் வருகிறது.
பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 8 Gen 3 SoC) மற்றும் ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கொடுக்கிறது. சோனி எல்ஒய்டி 700 (Sony LYT 700) சென்சாருடன் மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

இந்த டெலிபோட்டோ கேமராவில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் மற்றும் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. மேலும், மெட்டல் பிரேம் பாடியில் அலெர்ட் ஸ்லைடர் கிடைக்கிறது. கிரே மற்றும் கோல்டன்-லைக் கலர்களில் வெளியாக இருக்கிறது. ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) பீச்சர்களை கொடுக்க இருக்கிறது. ஆகவே, ஏஐ நோட்ஸ் (AI Notes) பீச்சர் வருகிறது.
மேலும், ஏஐ இமேஜிங் பவர் (AI Imaging Power) டெக்னாலஜி மூலம் ஏஐ ரெப்லெக்சன் எரைசர் (AI Reflection Eraser), ஏஐ அன்பிளர் (AI Unblur) மற்றும் ஏஐ டீடெயில் பூஸ்ட் (AI Details Boot) பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. இப்போது, இந்த ஒன்பிளஸ் 13 ஆர் போனில் எதிர்பார்க்கப்படும் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
இந்த ஒன்பிளஸ் 13ஆர் போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்க இருக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் போக 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. வழக்கமான ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்க இருக்கிறது.
அதேபோல டைப்-சி ஆடியோ (Type-C Audio), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 7 (Wi-Fi 7) கனெக்டிவிட்டிகள் இருக்கின்றன. இந்த ஒன்பிளஸ் 13ஆர் போனின் ஆரம்ப விலை ரூ.40000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 மணிக்கு விலை தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications








