Home
Mobile

மார்கெட் மிரளுது.. SONY கேமரா.. 12GB ரேம்.. 6000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OnePlus 13R அறிமுகம்!

சோனி எல்ஒய்டி 700 சென்சார் மெயின் கேமரா, சாம்சங் ஐசோசெல் ஜேஎன்5 சென்சார் டெலிபோட்டோ கேமரா, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 4 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் கொடுக்கும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், ஏஐ பீச்சர்களுடன் ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) ஆகியவற்றுடன் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) போன் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.

ஒன்பிளஸ் 13ஆர் அம்சங்கள் (OnePlus 13R Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் சோனி எல்ஒய்டி 700 (Sony LYT 700) சென்சார் + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் கொண்ட 50 மெயின் கேமரா வருகிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. சாம்சங் ஐசோசெல் ஜேஎன்5 (Samsung ISOCELL JN5) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

மார்கெட் மிரளுது.. SONY கேமரா.. 12GB ரேம்.. 6000mAh பேட்டரி.. மாடல்?

இந்த டெலிபோட்டோ கேமராவில் 2X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 4X லாஸ்லெஸ் ஜூமிங் கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாரும் 16 எம்பி செல்பீ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாரும் வருகிறது. இந்த கேமராவில் ஏஐ ரெப்லெக்சன் எரைசர் (AI Reflection Eraser), ஏஐ டீடெயில் பூஸ்ட் (AI Details Boot) மற்றும் ஏஐ அன்பிளர் (AI Unblur) போன்ற ஏஐ பீச்சர்கள் இருக்கின்றன.

இந்த போனில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) வருகிறது. இதில் கூகுள் ஜெமினி (Google Gemini), ஏஐ நோட்ஸ் (AI Notes) பீச்சர்கள் வருகின்றன. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் வருகிறது. 4 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கன செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்படுகின்றன.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. கேமிங் பிரியர்களுக்கான பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஜிபியு அட்ரினோ 750 (GPU Adreno 750) கிராபிக்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் 13ஆர் போனில் 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

மார்கெட் மிரளுது.. SONY கேமரா.. 12GB ரேம்.. 6000mAh பேட்டரி.. மாடல்?

இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுக்காப்பை (Corning Gorilla Glass 7i) கொடுக்கிறது. இந்த ஒன்பிளஸ் 13ஆர் போனில் 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) போர்ட்டுடன் 6000mAh பேட்டரி வருகிறது.

மேலும், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஆப்டிகல் சென்சார் (In-display Optical Sensor) மற்றும் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இந்த 13ஆர் மாடலில் IP65 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. அலுமினியம் மிடில் ஃபிரேம் பாடியில் அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider) வருகிறது. நெபுலா நோயர் மற்றும் ஆஸ்ட்ரல் டிரெயில் கலர்களில் இருக்கிறது.

இந்த ஒன்பிளஸ் 13ஆர் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.42,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆகவும் இருக்கிறது. ரூ.3000 அறிமுக சலுகையில் கிடைக்க இருக்கிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.39,999 பட்ஜெட்டிலும், 16 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.46,999 பட்ஜெட்டிலும் வாங்கி கொள்ளலாம்.

இந்த அறிமுக சலுகையானது, பேங்க் டிஸ்கவுண்ட் மூலம் கிடைக்க இருக்கிறது. ஆகவே, ஐசிஐசிஐ பேங்க் கார்டுகள் மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கும். இதுபோக ஒன்பிளஸ் கஸ்டமர்களுக்கு ரூ.4000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஜனவரி 13ஆம் தேதி விற்பனை தொடங்க இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R With 50MP Camera Launched Sale From January 13 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X