Home
Mobile

ஆர்டர் அள்ள போகுது.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சோனி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ஒன்பிளஸ் 13ஆர் போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது அமேசான் தளத்தில் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 13ஆர் போனுக்கு 4 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.42,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.39,998 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் அள்ள போகுது.. ஆஃபரில் OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் (OnePlus 13R Specifications): 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளே கொண்டு இந்த ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

Take a Poll

50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் + 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன். குறிப்பாக ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ஆக்டா கோர் (Snapdragon 8 Gen 3 Octa Core) சிப்செட் உடன் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

6000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

அதேபோல் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider), அட்ரினோ 750 கிராபிக்ஸ் கார்டு, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R with 12GB RAM price slashed on Amazon: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X