Home
Mobile

SALE சும்மா பிச்சிக்குது.. ரூ.4,200 ஆஃபரில் OnePlus போன்.. 6000mAh பேட்டரி.. SONY கேமரா.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்சிப் பர்ஃபாமென்ஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 80W சார்ஜிங், சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது. இந்த ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்கள் இதோ.

இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.42,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.4,200 விலை குறைப்பு போக ரூ.38,799 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,500 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.

SALE சும்மா பிச்சிக்குது.. ரூ.4,200 ஆஃபரில் OnePlus போன்.. மாடல்?

ஒன்பிளஸ் 13ஆர் அம்சங்கள் (OnePlus 13R Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எஎம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) கொடுக்கப்பட்டு உள்ளது.

4 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. 6.78 இன்ச் (2780 x 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது.

மிட்-ரேஞ்ச் பட்ஜெட் மாடலாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுத்து உள்ளது. கேமராவில் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. சோனி எல்ஒய்டி 700 (Sony LYT 700) சென்சார் மெயின் கேமராவுக்கு கிடைக்கிறது.

சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் அல்ட்ரா வைடு கேமராவில் வருகிறது. மேலும், சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் டெலிபோட்டோ கேமராவில் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), 2X சென்சார் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 16 எம்பி செல்பீ ஷூட்டர் இந்த ஒன்பிளஸ் மாடலில் உள்ளது.

சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் மற்றும் 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை (SuperVOOC Fast Charging) இந்த ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 8 மிமீ தடிமன் மற்றும் 206 கிராம் எடையை கொடுத்துள்ளது. ஆகவே, லைட் வெயிட் மாடலாக எதிர்பார்க்க முடியாது.

IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) இந்த ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளது.

ஆஸ்ட்ரல் டிரெயில் (Astral Trail) மற்றும் நெபுலா நோயர் (Nebula Noir) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 7 ( Wi-Fi 7), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகளை இந்த ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R With 12GB RAM 6000mAh Battery Available At 13 Percent Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X