Home
Mobile

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. வருகிறது OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த போனின் அறிமுகம் குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 13ஆர் அம்சங்கள் (OnePlus 13R Specifications): ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது OnePlus 5ஜி போன்..

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த ஒன்பிளஸ் 13ஆர் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா வசதி இதில் உள்ளது.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் ஏஐ அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

6.78-இன்ச் எல்டிபிஒ (LTPO) டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate)உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

6000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பவர்ஃபுல் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging), வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது OnePlus 5ஜி போன்..

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor), டூயல் ஸ்பீகார்கள், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது வரும் 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதாவது வரும் ஜனவரி மாதம் இந்த போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

photo credit: gsmchina

Best Mobiles in India

English summary
OnePlus 13R price, specifications, leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X