Home
Mobile

OnePlus போட்டான் பாரு.. ரூ.5,500 விலை குறைப்பு.. 12GB ரேம், 80W பாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது, மிட்-ரேஞ்ச் விலையில் வெளியான ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு கொடுத்து வருகிறது. இதன் கீழ் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5,500 விலை குறைப்பு போக ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. கூடுதலாக பேங்க் தள்ளுபடி உள்ளது. புதிய மாடல்கள் வருவதால், இப்படி பழைய மாடல்களுக்கு விலை குறைப்பு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டானது ரூ.42,999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் நேரடியாக ரூ.5,500 விலை குறைப்பு போக கிடைக்கிறது. ஆகவே, ரூ.37,399 விலைக்கு வாங்க முடியும். கூடுதலாக ரூ.1,500 பேங்க் தள்ளுபடியையும் பெற்று கொள்ள முடியும்.

OnePlus போட்டான் பாரு.. ரூ.5,500 விலை குறைப்பு.. 12GB ரேம் மாடல்!

இந்த விலை குறைப்பு மற்றும் தள்ளுபடியை பெறும்பட்சத்தில் ரூ.35,899 விலைக்கு ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ஆஸ்ட்ரல் டிரெயில் (Astral Trail) மற்றும் நெபுலா நோயர் (Nebula Noir) ஆகிய பிரீமியம் கலர்களில் வாங்கி கொள்ளலாம். கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனை கொண்டுள்ளது.

4 ஆண்ட்ராய்டு ஜெனரேஷன் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். ப்ரோஎக்ஸ்டிஆர் டிஸ்பிளே கிடைக்கிறது. சோனி சென்சாருடன் ஸ்டூடியோ கிரேடு போர்ட்ராய்டு அவுட்புட் கிடைக்கும். ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) கிடைக்கிறது. ஏஐ டீட்டெயில் பூஸ்ட், ஏஐ அன்பிளர், ஏஐ ரெஃப்ளெக்சன் எரைசர் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13ஆர் முக்கிய அம்சங்கள்:

120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2780 x 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் பி3 கலர் காமட் உள்ளது. அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எஎம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. மேலும், ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) கிடைத்து உள்ளது. சோனி எல்ஒய்டி 700 (Sony LYT 700) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) டெக்னாலஜிகள் உள்ளன. 2X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. ஆட்டோ எச்டிஆர் (Auto HDR), இன்டர்வெல் ஷூட்டிங் (Interval Shooting), நைட்ஸ்கேப் (Nightscape), ஹை-ரெஸ் மோட் (Hi-Res Mode) கிடைக்கிறது.

மேலும், ப்ரோ மோட் (Pro Mode), மூவி மோட் (Movie Mode), அல்ட்ரா ஸ்டெடி மோட் (Ultra Steady Mode) உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP65 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரை இந்த ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R Price Cut in India Available At Rs 37499 From Rs 42999 Launch Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X