OnePlus 13R மிரட்டிவிட்டாப்ல.. 8T LTPO AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. விலை என்ன?
ஒன்பிளஸ் (OnePlus) அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் கில்லர் மாடலான ஒன்பிளஸ் 3 (Flagship smartphone killer OnePlus 13) போனை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த புதிய பிளாக்ஷிப் ஒன்பிளஸ் 13 சந்தானத்துடன் பட்ஜெட் செக்மென்ட் மொபைல் ஆன ஒன்பிளஸ் 13R (OnePlus 13R) மாடலையும் சேர்த்து அறிமுகம் செய்யவுள்ளது என்ற தகவல் உறுதியாகியுள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13R ஆகிய இரண்டு மாடல்களும் ஜனவரி 2025 இல் அறிமுகமாவதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13R (OnePlus 13R) ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு முன்பாக, OnePlus 13R போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்ச தகவல்கள் இப்போது முழுமையாக வெளியாகியுள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் 13R (OnePlus 13R) போனில் என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்று முழு விபரத்துடன், இந்த போனின் விலை என்னவாக இருக்கும் என்ற கணிப்பை பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

ஒன்பிளஸ் 13R சிறப்பம்சம் (OnePlus 13R Specifications):
6.78" இன்க் அளவு கொண்ட 2780×1264 பிக்சல் (pixel) உடன் 8T LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1Hz முதல் 120Hz வரை ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை ஆதரிக்கும். இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Octa Core Snapdragon 8 Gen 3 SoC) உடன் வருகிறது.
OnePlus 13R மொபைல் சாதனம் 12GB LPDDR5X ரேம் (RAM) உடன் 256GB ஸ்டோரேஜ் (storage) ஆதரவை கொண்டிருக்கும். இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 15 உடன் ஆக்சிஜன் ஓஎஸ் 15 (Android 15 with OxygenOS 15) இயங்குதளத்துடன் வருமென்று கூறப்படுகிறது. இது டூயல் நானோ சிம் கார்டு (Dual SIM nano + nano) ஆதரவை பெறுகிறது.
ஒன்பிளஸ் 13R கேமரா (OnePlus 13R Camera):
கேமரா அம்சம் பற்றி பேசுகையில், புதிய OnePlus 13R சாதனம் OIS ஆதரவுடன் 50MP ரியர் கேமரா, 8MP உடன் 120° அல்ட்ரா வைடு கேமரா (ultra-wide camera) மற்றும் 50MP டெலிபோட்டோ கேமராவை (telephoto camera) கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவை LED ஃபிளாஷ் உடன் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இந்த சாதனம் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இந்த போன் இன்-டிஸ்பிளே ஆப்டிக்கல் பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் ஆகியவற்றை கொண்டிருக்கும். இந்த சாதனம் 5G SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை (Wi-Fi 7 802.11 be 2.4GHz + 5GHz), ப்ளூடூத் (Bluetooth 5.4), Beidou: B1I+B1C+B2a;ஜிபிஎஸ் (GPS: L1+L5), க்ளோனஸ் (GLONASS: G1), Galileo: E1+E5a; QZSS: L1+L5, NFC, USB Type-C போன்ற இணைப்பு ஆதரவை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 13R விலை (OnePlus 13R Price):
ஒன்பிளஸ் 13R (OnePlus 13R) சாதனம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் (stereo speakers) உடன் 6000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இதில் 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் (fast charging) அம்சமும் இடம்பெறுகிறது. ஒன்பிளஸ் 13R டிவைஸ் நெபுலா நோயிர் (Nebula Noir) மற்றும் ஆஸ்ட்ரல் ட்ரைல் (Astral Trail) நிறங்களில் 12GB + 256GB மாடலாக வெளிவரும் என்று கூறப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பங்களும் இடம்பெறும். இதன் விலை ரூ. 35,000 முதல் ரூ. 40,000 விலை புள்ளியில் துவங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








