ஆபர் விலையில் OnePlus 13R விற்பனை.. நம்பி வாங்க நச்சுன்னு 4 காரணங்கள்!
2025 ஆம் ஆண்டில் ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் விற்பனையை தொடர்ந்து, அதனுடன் சேர்ந்து இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனையும் இன்று (ஜனவரி 13) முதல் தொடங்குகிறது.
ஒன்பிளஸ் 13ஆர் 5ஜி மாடலின் இந்திய விலை நிர்ணயம் என்ன? விற்பனையின் போது என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) மாடலுக்கும் இதற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன? என்னென்ன காரணங்களை முன்வைத்து புதிய ஒன்பிளஸ் 13ஆர் மாடலை நம்பி வாங்கலாம்?

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை: இந்தியாவில் இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கீழ் வாங்க கிடைக்கும். 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.42,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் +512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும்
ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விற்பனை: இன்று (ஜனவரி 13 ஆம் தேதி) மதியம் 12 மணிக்கு ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும். இது அமேசான் (Amazon), ஒன்பிளஸ்.இன் (OnePlus.in), ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் (OnePlus Store App) மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் (OnePlus Experience Store) வழியாக 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்: ஆஸ்ட்ரல் டிரெயில் மற்றும் நெபுலா நொயர்.
ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் மீதான ஆபர்கள்: ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கும், மேலும் பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் முன்னணி கிரெடிட் கார்டுகளில் 12 மாத நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் கிடைக்கும்.
ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது
மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது
ஒன்பிளஸ் 13ஆர் VS ஒன்பிளஸ் 12ஆர்: இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையே.. ஒன்பிளஸ் 12ஆர் மாடலுக்கு பதிலாக ஏன் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்பதற்கான காரணங்களாக அமைகின்றன. அது என்னென்ன வேறுபாடுகள்? அது என்னனென்ன காரணங்கள்? இதோ விவரங்கள்:
01. ஒன்பிளஸ் 13ஆர் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12ஆர் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12ஆர் மாடலில் உள்ளது சற்றே பழைய 2022 ஆம் ஆண்டிற்கான பிளாக்ஷிப் ப்ராசஸர் ஆகும். ஒன்பிளஸ் 13ஆர் மாடலில் உள்ளது 2023 பிளாக்ஷிப் ப்ராசஸர் ஆகும்.
02. ஒன்பிளஸ் 13ஆர் ஆனது 6.77-இன்ச் 1.5கே ProXDR LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 12ஆர் ஆனது 6.78-இன்ச் 1.5K ProXDR LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 13ஆர் ஆனது கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷனை பெறுகிறது. ஒன்பிளஸ் 12ஆர் ஆனது கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷனை பெறுகிறது. ஒன்பிளஸ் 13ஆர் பிளாட் டிஸ்பிளேவை வழங்குகிறது, ஒன்பிளஸ் 12ஆர் கர்வ்டு டிஸ்பிளேவை வழங்குகிறது.
03. இரண்டுமே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்களை கொண்டுள்ளன. ஒன்பிளஸ் 13ஆர் மாடலில் 50எம்பி Sony LYT-700 ப்ரைமரி கேமரா + 50MP டெலிஃபோட்டோ + 8MP அல்ட்ரா-வைட் கேமராக்கள் உள்ளன. ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 50MP சோனி IMX890 ப்ரைமரி + 8MP அல்ட்ரா-வைட் + 2MP மேக்ரோ கேமராக்கள் உள்ளன. இரண்டுமே 16MP செல்பீ கேமராக்களை கொண்டுள்ளன.
04. ஒன்பிளஸ் 13ஆர் மாடலில் உள்ள 6,000mAh பேட்டரி ஆனது ஒன்பிளஸ் 12ஆர் மாடலில் உள்ள 5500mAh பேட்டரியை விட பெரியது. ஆனால் இரண்டுமே 100W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகின்றன. ஓஎஸ் அப்டேட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஆனது ஆண்ட்ராய்டு 15 உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 19 வரையிலான மேம்படுத்தல்களை பெறும். ஒன்பிளஸ் 12ஆர் ஆனது ஆண்ட்ராய்டு 17 வரையிலானஅப்டேட்களை மட்டுமே பெறும்.


Click it and Unblock the Notifications








