Home
Mobile

OnePlus காட்டில் ஆபர் மழை.. 6000mAh மாடல் மீது ரூ.4700 விலை குறைப்பு.. 8000mAh பேட்டரி உடன் புது மாடல்!

ஒன்பிளஸ் 15 (OnePlus 15) அறிமுகமான வேகத்தில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலின் விலை குறைக்கப்பட்டதை போலவே, ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் உறுதிசெய்யப்பட்ட வேகத்தில் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மீதும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் அடுத்த பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருவதாக தெரிகிறது. அது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் அறிமுகமாகும். முன்னதாக ஒன்பிளஸ் 15 உடன் சேர்ந்து அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த மாடல், தற்போது தனியாக, கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

OnePlus காட்டில் ஆபர் மழை.. 6000mAh மாடல் மீது ரூ.4700 விலை குறைப்பு!

முதலில் இது சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) என்கிற பெயரில் அறிமுகமாகும், பின்னர் உலகளாவிய சந்தைகளுக்கு ஒன்பிளஸ் 15ஆர் ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டுமே ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் மீது பெரிய அளவிலான விலை குறைப்புகளை அறிவித்து, தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கீழ் அறிமுகமானது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.42,999 க்கும் மற்றும் 16ஜிபி ரேம் +512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கும் அறிமுகமானது.

ஆனால் தற்போது அமேசான் இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.3000 விலை குறைப்பை பெற்றுள்ளது. மறுகையில் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.4774 விலை குறைப்பை பெற்று ரூ.38,225 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதுவரை அறிக்கைகளின்படி, டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனில் 1.5 கே ரெசல்யூஷன் மற்றும் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பை பெறலாம்.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் ஆனது 100W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 8000mAh பேட்டரியை பேக் செய்யலாம். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ்16 உடன் அறிமுகம் செய்யப்படலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது மெட்டல் மிடில் ஃபிரேம், அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார், டூயல் ஸ்பீக்கர்ஸ் மற்றும் என்எப்சி ஆதரவு ஆகியவைகளுடன் வரலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R gets Up to Rs 4700 Price Cut After OnePlus 15R India Launch Teased As Coming Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X