Home
Mobile

புதுசா 7400mAh OnePlus போன் வந்ததும் இந்த 6000mAh OnePlus 5ஜி போன் மீது ரூ.4500 விலை குறைப்பு!

இந்தியாவில் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனாக 7400mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போன் அறிமுகமான வேகத்தில் ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம், அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய மூன்றிலுமே ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒன்பிளஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.1000 விலைகுறைப்பு + ரூ.2000 உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ரூ.42,999 க்கு அறிமுகமான ஒன்பிளஸ் 13ஆர் மாடலின் விலையை குறைந்தபட்சம் ரூ.41,999 ஆகவும், அதிகபட்சம் ரூ.39,999 ஆகவும் குறைக்க முடியும்.

இந்த 6000mAh OnePlus 5ஜி போன் மீது ரூ.4500 விலை குறைப்பு!

அமேசான் இந்தியா வலைத்தளமும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனை அதன் அசல் அறிமுக விலையான ரூ.42,999 க்கு பதிலாக ரூ.1000 விலை குறைத்து ரூ.41,999 க்கு விற்பனை செய்கிறது. ஆனால் பிளிப்கார்ட் வலைத்தளமோ நேரடியாக ரூ.4,559 விலை குறைப்பை வழங்கி ரூ.42,999 க்கு பதிலாக ஒன்பிளஸ் 13ஆர் மாடலை ரூ.38,440 க்கு விற்பனை செய்கிறது.

புதிய ஒன்பிளஸ் 15ஆர் விலை விவரங்கள்: ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.47,999 என்றும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.52,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அறிமுக சலுகையின் கீழ் முறையே ரூ.3000 மற்றும் ரூ.5000 பேங்க் ஆபர் (ஆக்சிஸ் மற்றும் எச்டிஎப்சி) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.44,999 ஆகவும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.47,999 ஆகவும் குறைக்க முடியும்.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது சார்கோல் பிளாக் மற்றும் மின்ட் க்ரீன் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும். அதே நேரத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஏஸ் எடிஷன் எலக்ட்ரிக் வயலட் கலரில் வாங்க கிடைக்கும். ஏற்கனவே முன்பதிவுகள் தொடங்கி விட்ட நிலையில், ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விற்பனை வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் FHD பிளஸ் அமோல்இடி டிஸ்பிளே
- குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS ஆதரவு உடனான 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா

- ஆட்டோஃபோகஸுடன் 32MP செல்பீ கேமரா
- 7400mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பைபாஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் 16
- IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R gets up to Rs 4500 Price Cut After OnePlus 15R Launched in India At Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X