Home
Mobile

எந்த கிரெடிட், டெபிட் கார்டும் இல்லாமல் லேட்டஸ்ட் OnePlus மீது நேரடி விலை குறைப்பு.. 80W சார்ஜிங், 6000mAh!

ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி அன்று ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ஒன்பிளஸ் 15ஆர் மாடலையும் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலைப்பாட்டில் அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்பாக ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனின் மீது ரூ.4000 நேரடி விலை குறைப்பை வழங்குகிறது.

அதாவது எந்தவொரு வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டும் இல்லாமலேயே நேரடியாக ரூ.4000 விலை குறைப்பு கிடைக்கிறது. இதன்கீழ் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் அதன் அசல் அறிமுக விலையான ரூ.42,999 க்கு பதிலாக ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது.

லேட்டஸ்ட் OnePlus மீது நேரடி விலை குறைப்பு!

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஆக அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒன்பிளஸ் ஏஸ் 6 மாடலில் அதே அம்சங்கள் ஒன்பிளஸ் 15ஆர் மாடலிலும் இருக்கும்.

ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர் ஓஎஸ் 16 கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 165Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.83-இன்ச் 1.5கே (1272 x 2800 பிக்சல்கள்) பிளாட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது, இது 16ஜிபி வரை LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ்-ஹெவி பணிகளை கையாள ஜி2 கேமிங் சிப்பும் உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு 16-மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனானது 7800mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் விலைப்பிரிவில் இதுவொரு மிகப்பெரிய பேட்டரி என்று கூறப்படுகிறது. இது 120W பாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஆனால் ஒன்பிளஸ் 15 மாடலில் இருப்பதை போல வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இதில் இல்லை.

ஒன்பிளஸ் 15ஆர் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.32,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆக இந்தியாவில் இது ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ரூ.44,990 க்கு அறிமுகம் ஆகலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R gets Rs 4000 Price Cut in Amazon India Ahead OnePlus 15R Launch in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X