Home
Mobile

முரட்டு ப்ரைஸ் கட்-ஆ இருக்கே.. 6000mAh பேட்டரி OnePlus போன்.. எல்லாம் 7400mAh பேட்டரில புது மாடல் வரும் நேரம்!

இந்தியாவில், ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இதற்கு முந்தைய மாடல் ஆன ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மீது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது (ஒன்பிளஸ் 14ஆர் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது).

அமேசான் இந்தியா வலைத்தளத்தில், ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் இது ரூ.42,999 க்கு அறிமுகமானது. ஆக தற்போது நேரடியாக ரூ.3000 விலை குறைப்பை பெற்றுள்ளது.

முரட்டு ப்ரைஸ் கட்-ஆ இருக்கே.. 6000mAh பேட்டரி OnePlus போன்!

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன் டூ பாடி, 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டு உள்ளது

அதில் ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார், 2 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது

டிசம்பர் 17 அறிமுகமாகும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கலாம்? முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.42,999 க்கு அறிமுகமானது. ஆக பெரும்பாலும் ஒன்பிளஸ் 15ஆர் ஆனது ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் இருக்கும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.44,999 அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது? டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு இருக்குமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிப்செட்டை பொருத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப் உடன் இயங்கும்.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 80W பாஸ்ட் சார்ஜிங் ஆடஹரவு கொண்ட 7400mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இதோடு ஆக்சிஜென் ஓஎஸ் 16 (OxygenOS 16), ஒரு பிளஸ் கீ, 4கே 120fps வீடியோ பதிவு ஆதரவுடன் 50எம்பி ரியர் கேமரா மற்றும் ஐபி68 / 69 ரேட்டிங் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு பாடி ஆகிய அம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. கடைசியாக இது பிளாக், க்ரீன் மற்றும் வயலட் ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்படும்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 246ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.72,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R gets Rs 3000 Price cut in amazon India Ahead OnePlus 15R Launch on December 17
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X