Home
Mobile

8000mAh பேட்டரி உடன் புது OnePlus போன்.. அடிமட்ட விலைக்கு இறங்கிய 6000mAh பேட்டரி OnePlus போன்!

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீட்டு நிகழ்வு எப்போது நடக்கும் என்கிற தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அது 2025 டிசம்பர் 17 ஆம் தேதி ஆகும். குறிப்பிட்ட தேதியில் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனும், ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2) டேப்லெட்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்ட வேகத்தில் ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம் (OnePlus India Website), அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை - சரிவை கண்டுள்ளது; அதாவது விலை குறைக்கப்பட்டுள்ளது.

அடிமட்ட விலைக்கு இறங்கிய 6000mAh பேட்டரி OnePlus போன்!

தற்போது ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் இந்தியாவும் இதே விலைக்கு (ரூ.39,999) அதே ஸ்டோரேஜ் ஆப்ஷனை விற்கிறது. பிளிப்கார்ட் இன்னும் விலையை குறைத்து ரூ.38,353 க்கு விற்கிறது.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13 உடன் சேர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.42,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆக தற்போது இது ரூ.3000 க்கும் மேலான விலை 1குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனானது 1264 x 2780 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 93.9 சதவிகித ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை (Snapdragon 8 Gen 3 Chipset) கொண்டு உள்ளது. இந்த சிப்செட் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் + 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா உள்ளன

முன்பக்க கேமராவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடன் வருகிறது.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999 இல் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சில நாட்களுக்கு முன்னர் அறிமுகமான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.72,999 ஆகும்.அதாவது ஒன்பிளஸ் 15ஆர் மாடலின் எதிர்பார்க்கப்படும் விலையை விட சுமார் ரூ.28,000 குறைவாகும்.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை - ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Gen 5) சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் 16 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்ட 8000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R gets Rs 3000 Official Price Cut Just After OnePlus 15R India Launch Set As December 17
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X