Home
Mobile

மட்ட ரேட்ல 6000mAh பேட்டரி.. OnePlus போனுக்கு ரூ.2009 விலை குறைப்பு.. ரூ.2,050 பேங்க் ஆஃபர்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகி இருக்கும் ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13எஸ் மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களுக்கு நேரடி விலை குறைப்பு மற்றும் பேங்க் ஆஃபர்கள் கிடைக்கின்றன. இப்போது, ஒன்பிளஸ் 13 போன் விலை குறைப்பு மற்றும் தள்ளுபடி போக மட்ட ரேட்டில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் (Flipkart) ஈ-காமர்ஸ் தளத்தில் தற்போது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஆரம்ப மாடலான 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.40,990 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இது ரூ.42,999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆகவே, ரூ.2,009 விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது.

மட்ட ரேட்ல 6000mAh பேட்டரி.. OnePlus போனுக்கு ரூ.2009 விலை குறைப்பு!

இந்த விலை குறைப்புடன் ரூ.2,050 பேங்க் ஆஃபரை தகுதியான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். இந்த விலை குறைப்பு மற்றும் பேங்க் ஆஃபர் ஆனது நெபுளா நோய்ர் (Nebula Noir) மாடலுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த விலைகள் பிளிப்கார்ட் தளத்தில் இப்போது இருக்கக் கூடியாது. ஆகவே, மாற வாய்ப்புள்ளது.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவில் எந்த குறையும் சொல்ல முடியாதபடி 2780 x 1264 பிக்சல்கள் ரெசொலூஷனுடன் 6.78 இன்ச் எல்டிபிஓ அமோலெட் பேனல் கிடைத்துள்ளது.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டும், 2160Hz பிடபிள்யூ டிம்மிங் ஃபிரிகொன்சியும் வழங்கப்பட்டு உள்ளது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

மிட்-ரேஞ்ச் விலையில் கிடைப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பை இந்த ஒன்பிளஸ் 13ஆர் கொடுத்து உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் ப்ராசஸர் கொண்டுள்ளது. ஆக்டா கோர் மாடலாக இருக்கிறது. அட்ரெனோ 750 கிராபிக்ஸ் பெர் யூனிட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஜெனரேஷன் கிடைக்கிறது.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 கொண்ட மடாலாக இந்த ஒன்பிளஸ் 13ஆர் வாங்கி கொள்ள கிடைக்கிறது. 4 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வருகின்றன. செக்யூரிட்டி அப்டேட்களும் 6 ஆண்டுகளுக்கு கொடுக்கும்படி பாலிசி கிடைக்கிறது. பர்ஃபாமென்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்களில் குறை சொல்ல முடியாத மாடலாக இருக்கிறது.

கேமராவை பார்க்கையில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொடுத்துள்ளது. எப்/1.8 அபெர்க்ஷர் சோனி எல்ஒய்டி-700 சென்சார் மற்றும் ஓஐஎஸ் கொண்ட 50எம்பி ரியர் மெயின் கேமரா + எப்/2.2 அபெர்க்ஷர், சோனி ஐஎம்எக்ஸ்355 120 டிகிரியுடன் 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + எப்/2.0 அபெர்க்ஷர், சாம்சங் ஜேஎன்5 சென்சாருடன் 50எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது.

4கே தரத்திலான வீடியோ ரெக்கார்ட், 2x டெலிபோட்டோ ஜூம் கிடைக்கிறது. முன்பக்கத்தில் 16 எம்பி கேமராவுடன் சோனி ஐஎம்எக்ஸ்480 சென்சார், எப்/2.4 அபெர்க்ஷர், 1080p தரத்தில் வீடியோ ரெக்கார்ட் கிடைக்கிறது. 80வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 6000எம்ஏஎச் பேட்டரியை கொடுத்து உள்ளது. சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்காக இது கிடைக்கிறது.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங்கையும் பெற்ற மாடலாக இந்த ஒன்பிளஸ் 13ஆர் இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மோஸ் மற்றும் இன்பிராரெட் சென்சாருடன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

மிட்-ரேஞ்ச் விலைக்கு கிடைக்கும் ஸ்மார்ட்போனாக இருப்பதால் குவாலிட்டி மற்றும் அம்சங்களில் பெரிய குறைகள் கிடையாது. கேமரா விரும்பிகளுக்கு ஏற்ற சென்சார்கள் மற்றும் அம்சங்கள் இருக்கிறது. அதிக பேட்டரி மற்றும் பர்ஃபாமென்ஸ் விரும்பிகளுக்கும் இதில் சிப்செட் மற்றும் கேபாசிட்டி போதுமானதாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 13R gets Rs 2009 Bank Discount in Flipkart Check Price Details and Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X