Home
Mobile

சூப்பரு.. OnePlus 13s அறிமுக தேதி அறிவிக்கப்பட்ட வேகத்தில்.. அடிமட்ட விலைக்கு இறங்கிய OnePlus 13R மாடல்!

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியை (OnePlus 13s India Launch Date) அறிவித்த வேகத்தில் அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது ஒன்பிளஸ் 13ஆர் மிகப்பெரிய பேங்க் டிஸ்கவுண்ட் ஆபரை அறிவித்துள்ளது. அப்படி என்ன ஆபர்? ஒன்பிளஸ் 13ஆர் இப்போது என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? ஒன்பிளஸ் 13எஸ் எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 13ஆர் தற்போது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.51,999 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது பேங்க் டிஸ்கவுண்ட்டை உள்ளடக்கிய விலையாகும். ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி ஜூன் 5 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பரு.. அடிமட்ட விலைக்கு இறங்கிய OnePlus 13R மாடல்!

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே

- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)

- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்

- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 4 மைக்ரோஃபோன்கள்
- டால்பி அட்மாஸ்
- அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ
- எடையில் 185 கிராம்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனாக அறிமுகமான மாடலின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விலை சுமார் ரூ. 50,000 ஆக இருக்கலாம் என்றும், இதே மாடல் அமெரிக்காவில் $649 ஆகவும், துபாயில் வாங்குபவர்களுக்கு AED 2,100 ஆகவும் இருக்கலாம் என்றும் தகவல் லீக் ஆகியுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் சீனாவில் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.39,805 க்கு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.42,150 க்கும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.44,490 க்கும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ரூ.46,835 க்கும், ஹை-எண்ட் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.52,690 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R gets Biggest Discount After OnePlus 13s June 5 India Launch Date Announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X