Home
Mobile

OnePlus 13R மாஸ் கிளப்ப போகுது.. பட்ஜெட் விலை என்ன? என்ன அம்சங்கள்? எப்போது அறிமுகம்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் 13 சீரிஸ் (OnePlus 13 series) வரிசையை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13R (OnePlus 13R) ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெறுமென்று கூறியுள்ளது. ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) அறிமுகம் செய்யப்பட்டு வெற்றியடைந்ததை தொடர்ந்து, நிறுவனம் இப்போது ஒன்பிளஸ் 13R மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. ஒன்பிளஸ் 13 நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடலாகவும், ஒன்பிளஸ் 13R பட்ஜெட் விருப்பமாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போன்களின் அறிமுகத்திற்கு முன்பாக இதில் என்னென்ன அம்சங்கள் வெளிவருமென்று பார்க்கலாம்.

உலக சந்தையில் ஒன்பிளஸ் ஏஸ் 5 (OnePlus Ace 5) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட சாதனம் இந்திய சந்தையில் OnePlus 13R மாடலாக அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய OnePlus 13R சாதனம் 1.5K ரெசொலூஷன் உடன் OLED டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இது 6.7" இன்ச் அல்லது 6.8" இன்ச் டிஸ்பிலேவை கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வெளிவரும்.

OnePlus 13R மாஸ் கிளப்ப போகுது.. பட்ஜெட் விலை என்ன? என்ன அம்சங்கள்?

இந்தியாவில் OnePlus 13R மாஸ் கிளப்ப போகுது:

OnePlus 13R சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 chipset) உடன் வெளிவருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 16GB LPDDR5X ரேம் (RAM) உடன் 128GB, 256GB வேரியண்ட் மாடல்களில் வெளிவரலாம். கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP Sony IMX9 சென்சார் உடன் இரண்டு கூடுதல் லென்ஸ்களை கொண்டிருக்குமென்று கூறப்படுகிறது.

OnePlus 13R சாதனம் 6500mAh பேட்டரி அம்சத்தை கொண்டிருக்குமென்றும், இது 100W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனை நிறுவனம் ஆண்ட்ராய்டு 15 உடன் ஆக்சிஜன் ஓஎஸ் 15 (Android 15 with OxygenOS 15) இயங்குதளத்தில் இயங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை பற்றிய விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

OnePlus 13R விலை என்ன?

விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் புதிய ஒன்பிளஸ் 13R ஸ்மார்ட்போன் சாதனம் $500 முதல் $600 டாலர் விலைக்குள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 42,037 முதல் ரூ. 50,444 விலைக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவொரு மிட்ரேஞ் பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாதனமாக வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த விலை லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள விலை என்பதை கவனத்தில்கொள்ளவும்.

ஒன்பிளஸ் 13R ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன என்பது இதன் அறிமுகத்தை போது தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த விலையை விட ஒன்பிளஸ் 13R குறைந்த விலையில் சந்தைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R Coming Soon To India What To Expect In Specifications and Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X