Home
Mobile

போட்றா வெடிய.. ரூ.40,000-க்கு புது OnePlus போன்.. 6000mAh பேட்டரி, 50MP டெலிபோட்டோ கேமரா.. என்ன மாடல்?

2 மாதங்களுக்கு முன்பாகவே வருவதால்.. எல்லோருடைய கவனமும் ரூ.70,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாக உள்ள ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் மீது இருக்கும் நேரத்தில்.. மிட்-ரேன்ஜ் பிரிவின் கீழ்.. ரூ.40,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வரும் இன்னொரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் லான்ச் டைம்லைன் (Launch Timeline), முக்கிய அம்சங்கள் (Major Specifications) மற்றும் விலை நிர்ண்யம் (Price Range) குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்ன மாடல்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக வரும் இது, ஒன்பிளஸ் 12ஆர் மாடலை போலவே பிரீமியம் மிட்-ரேஞ்ச் பிரிவில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ஒன்பிளஸ் 12ஆர் இன்னமும் நல்ல முறையிலான விற்பனையை சந்திக்கிறது; இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிற்கான "மலிவு விலை மாற்றாக" பார்க்கப்படுகிறது.

ரூ.40,000-க்கு புது OnePlus போன்.. என்ன மாடல்?

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? டிப்ஸ்டர் டிஜியால் சாட் ஸ்டேஷன் (DigitalChatStation) ஆனது இந்த ஸ்மார்ட்போனின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடாமல், அதன் முக்கிய அம்சங்களை பகிர்ந்துள்ளது. அதன்படி இது 1.5கே டிஸ்ப்ளேவை பேக் செய்யும்; ஆனால் ஸ்க்ரீனின் அளவு பற்றிய விவரங்கள் இல்லை.

சிப்செட்டை பொறுத்தவரை, இது குவால்காம் SM8750 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4 Chipset) ஆக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12ஆர் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஏஜன் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி சோனி IMX906 ப்ரைமரி கேமரா மற்றும் 50எம்பி சாம்சங் JN1 டெலிஃபோட்டோ கேமராவை கொண்டிருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் இது ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரிஸில் (Oppo Find X8 Series) பயன்படுத்தப்பட்ட அதே கேமரா செட்டப் ஆகும்.

பழைய ஒன்பிளஸ் 12ஆர் மாடலில் 50எம்பி சோனி IMX890 ப்ரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ யூனிட் + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவைகள் உள்ளன. அதாவது புதிய மாடல் டெலிஃபோட்டோ சென்சார் உடன் மிகப்பெரிய அப்கிரேட்-ஐ காணவுள்ளது. பேட்டரியிலும் நல்ல மேம்பாட்டை காணலாம். ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படலாம். இது ஒன்பிளஸ் 12ஆர் மாடலில் உள்ள 5,500mAh பேட்டரியை விட அதிகமாகும்.

ஒன்பிளஸ் 13ஆர் எப்போது அறிமுகமாகும்? முதலில் இது ஒன்பிளஸ் ஏஸ் 5 (OnePlus Ace 5) என்கிற பெயரின் கீழ் சீனாவில் அறிமுகமாகும். பின்னர் இது இந்தியாவிலும் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளிலும் ஒன்பிளஸ் 13ஆர் என மறுபெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்படும்.

சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரிஸ் (OnePlus Ace 5 Series) ஸ்மார்ட்போன்கள் ஆனது இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது, ஒன்பிளஸ் 13 மாடல் உடன் சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் கூடிய விரைவில் அறிமுகமாகலாம்.

ஒன்பிளஸ் 13ஆர் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? இந்தியாவில் இது ரூ.40,000 - ரூ.45,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.37,990 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக ஒன்பிளஸ் 13ஆர் மாடல் ஆனது அதிகபட்சம் ரூ.45,000 வரை செல்லலாம் என்கிற எங்களுடைய யூகம் - நியாயமானதாகவே தெரிகிறது!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13R aka OnePlus Ace 5 Launch Timeline Specifications Features Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X