இதான் இந்தியாவுக்கு வேணும்.. ரூ.49,999 க்கு புது OnePlus போன்.. 16GB ரேம், 6000mAh பேட்டரி, 100W சார்ஜிங்!
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் இந்திய விலை (OnePlus 13 Price in India) நிர்ணயம் ரூ.77,000 க்கு அருகில் செல்லலாம் என்கிற தகவலும், ஒன்பிளஸ் 13-ன் ரிப்பேர் காஸ்ட் (OnePlus 13 Repair Cost) குறித்த விவரங்களும்.. "வாங்குனா.. வெயிட் பண்ணி ஒன்பிளஸ் 13-ஐ தான் வாங்குவேன்!" என்று கங்கணம் கட்டிக்கொண்டு, காத்திருந்த இந்தியர்களை 'ஆஃப்' செய்துள்ளது என்றே கூறலாம்.
இதற்கிடையில் ரூ.50,000 பட்ஜெட்டில் வரும் இன்னொரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகி.. "பேசாம இதை வாங்கிடலாம் போலயே!" என்று பலரையும் குஷிப்படுத்தி உள்ளது. அது ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போன் ஆகும். இது எப்போது வெளியாகும்? என்னென்னெ அம்சங்களை பேக் செய்யும்? என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? நம்பகமான சீன டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவலின்படி, இது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.78 இன்ச் டிஸ்பிளேவுடன் வரும். மேலும் இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்யலாம்.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 8 மெகாபிக்சல் செக்கண்டரி சென்சார் + 2 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகியவைகள் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரியுடன் அனுப்பப்படலாம்
ஒன்பிளஸ் 13ஆர் எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் 13 மாடலை போலவே இதுவும் முதலில் சீன சந்தையில் தான் அறிமுகமாகும். அங்கே இது ஒன்பிளஸ் ஏஸ் 5 என்கிற பெயரின்கீழ் இந்த 2024 ஆம் ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னரே இந்தியாவில் அறிமுகமாகும். இதுவும் ஒன்பிளஸ் 13 மாடலும் ஒரே சமயத்தில் இந்திய சந்தைக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது; ஆனால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை இனிவரும் நாட்களில் கிடைக்கும் தகவல்களை வைத்தே ஒரு முடிவுக்கு வர முடியும்.
ஒன்பிளஸ் 13ஆர் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் சீன விலை நிர்ணயம் என்ன? சீனாவில் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை 4499 யுவான்களுக்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.53,150 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.57,875 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜி வேரியண்ட் ரூ.62,590 க்கும், 24ஜிபி ரேம் + 1டிபி மாடல் ரூ.70,860 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதே போன்ற விலைகளை இந்திய சந்தையில் எதிர்பார்க்க கூடாது. இந்திய விலை ரூ.77,000 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஆனது 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், மூன்று 50எம்பி கேமராக்களை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications