Home
Mobile

டிசம்பரில் புது OnePlus மாடல்.. 16GB ரேம், 50MP கேம், 100W சார்ஜிங், 6000mAh பேட்டரி.. மிட்ரேன்ஜ் பிரிவு காலி!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அது ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதில் ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ப்ரோ (OnePlus Ace 5 Pro) இந்திய சந்தைக்கு வராது!

ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸின் வெளியீடு டிசம்பர் 2024 இல் நடக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை; பெரும்பாலும் இவைகள் டிசம்பர் மாதத்தின் முதல் 2 வாரங்களில் அறிமுகமாகலாம்.

மிட்-ரேன்ஜ் பிரிவு காலி.. டிசம்பரில் புது OnePlus மாடல்!

ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்லது ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் 13ஆர் ஆனது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.78 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். மேலும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் அந்த 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்யலாம்.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் 50எம்பி ப்ரைமரி சென்சார் + 8எம்பி செக்கன்டரி சென்சார் + 2எம்பி கேமரா இடம்பெறலாம். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஆனது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

டிசம்பர் 2024 என்பது ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரிஸின் சீன அறிமுகத்திற்கான லான்ச் டைம்லைன் ஆகும். அதாவது இந்தியாவில் இது ஒன்பிளஸ் 13ஆர் ஆக அறிமுகமாக இன்னும் சில வாரங்கள் ஆகலாம். ஒன்பிளஸ் 13ஆர் ஆனது சமீபத்தில் சீனாவில் அறிமுகமன ஒன்பிளஸ் 13 மாடலுடன் சேர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

ஏனென்றால் ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய 2 மாடல்களுமே டிடிஆர்ஏ (TDRA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இது உலகளாவிய சந்தைகளில் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் உடனடி வெளியீட்டை உறுதிப்படுத்துகிறது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இது 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்உடனான 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி 114° அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 6எக்ஸ் இன்-சென்சார் ஜூம், 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்,ஐபி68 + ஐபி69 ரேட்டிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.70,000 க்குள் அறிமுகம் செய்யப்பாலம் என்று திர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 இந்தியாவில் ரூ.64,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சில நம்பகமான ஆதாரங்கள் இது ரூ.80,000பிரிவில் நுழையும் என்று கூறுகின்றன. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 13ஆர் ரூ.45,000 - ரூ.50,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus 13R 2024 December Launch Confirmed See Specifications Features Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X