வெளுக்குது விற்பனை.. ரூ.12,000 ரேட் கம்மி.. 6000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
அமேசான் குடியரசு தின விற்பனை 2026 (Amazon Republic Day Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் மார்கெட் விலையில் இருந்து ரூ.12,000 கம்மியாக ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் அமோலெட் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் ரூ.61,999 விலைக்கு 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. இதே வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ.69,999ஆக விலை இருந்தது. ஆகவே, நேரடியாக ரூ.8,000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.

இந்த ரூ.4,000 தள்ளுபடி இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். இஎம்ஐ இல்லாமல் முழு தொகையை செலுத்தி வாங்கும் கஸ்டமர்களுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, அதிகபட்சமாக ரூ.12,000 விலை கம்மியாக இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ரூ.52,650 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் 13 அம்சங்கள் (OnePlus 13 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்டுள்ளது. ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) கிடைக்கிறது.
4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. டால்பி விஷன் (Dolby Vision) உள்ளது.
2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கிரிஸ்டல் ஷீல்டு சூப்பர் செராமிக் கிளாஸ் (Crystal Shield Super Ceramic Glass) பாதுகாப்பை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மெயின் கேமராவுக்கு சோனி எல்ஒய்டி 808 (Sony LYT 808) சென்சார் கிடைக்கிறது.
மேலும், அல்ட்ரா வைடு கேமராவில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் மற்றும் டெலிபோட்டோ கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கிடைத்து உள்ளது. இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 6X இன்-சென்சார் ஜூமிங் கொடுக்கப்பட்டு உள்ளது.
120X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இருக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் கிடைத்துள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் கிடைத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்டுள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








