OnePlus 13 வெறித்தனமா இருக்கு.. 6000mAh பேட்டரி, 100W சார்ஜிங், மூன்று 50MP கேமரா.. வெளியீட்டு தேதி, விலை?
OnePlus 13 Launch Price Specifications: கடந்த டிசம்பர் 2023 இல் சீனாவில் அறிமுகமாகி, பின்னர் 2024 ஜனவரியில் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலின் லான்ச் டைம்லைன் (Launch Timeline) ஆனது சற்றே வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது வழக்கமான லான்ச் டைம்லைன் உடன் ஒப்பிடும் போது ஒன்பிளஸ் 13 ஆனது 2 மாதங்களுக்கு முன்பாகவே அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. இதை மேலும் உறுதி செய்யும் வண்ணம், ஒன்பிளஸ் 13-ன் பேட்டரி கெப்பாசிட்டி, பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் கேமரா சென்சார் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளது. அதென்ன விவரங்கள்? ஒன்பிளஸ் 13 வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இது விலைக்கு அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக வெளியான விவரங்களின்படி, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 6000எம்ஏஎச் பேட்டரியுடன் (6000mAh Battery) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே கெப்பாசிட்டி, கிஸ்மோசீனாவின் சமீபத்திய அறிக்கையிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கை, ஒன்பிளஸ் 13 ஆனது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கூறுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஆனது எப்/1.6 அபெக்ஷர் உடனான 50-மெகாபிக்சல் சோனி எல்ஒய்டிT-808 கேமரா சென்சாரை (Sony LYT-808 camera sensor) பேக் செய்யலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் O916T ஹாப்டிக் மோட்டாருடன் (O916T haptic motor) வரும் என்றும் கூறப்படுகிறது.
முந்தைய லீக்ஸ் தகவல்கள், ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில்.. ப்ரைமரி சென்சார் உடன் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 50 மெகாபிக்சல் சென்சார் (50-megapixel sensor with an ultra-wide lens) மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ( 3x optical zoom) கொண்ட 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் (50-megapixel periscope telephoto shooter) இருக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. இதெல்லாம் உண்மையாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் மூன்று 50எம்பி கேமராக்கள் இடம்பெறும்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது கர்வ்டு எட்ஜ்கள் (Curved Edges), 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உடனான 2கே பிளாட் டிஸ்பிளேவை (2K Flat Display) கொண்டிருக்கலாம். ப்ராசஸரை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4 chipset) மூலம் இயக்கப்படலாம்.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இதில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங் (IP69 Rating) இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இது அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் (ultrasonic fingerprint scanner) பெறலாம்.
முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் வட்ட வடிவிலான கேமரா மாட்யூல் (Circular camera module) இடம்பெறாமல் போகலாம். ஆனால் ஒன்பிளஸ் 13 ஆனது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் உள்ள அதே சென்சார்கள் தக்கவைத்து கொள்ளப்படலாம். மேலும் ஒன்பிளஸ் 13 மாடலின் விலையும் கூட ஒன்பிளஸ் 12-ஐ போலவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும் (OnePlus 13 Price)? இந்தியாவில் இது ரூ.65,000 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மாட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு அறிமுகமானது. சீன அறிமுகத்தை போலவே இந்திய அறிமுகமாகும் 2 மாதங்களுக்கு முன்பாகவே நடக்குமா என்கிற கேள்விக்கு தற்போது வரை பதில் இல்லை!


Click it and Unblock the Notifications








