Home
Mobile

OnePlus-ஆல் மிரள போகுது.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. 12GB ரேம்.. ஜனவரில மார்கெட் காலி!

இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் (OnePlus) பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ஒன்பிளஸ் 13 (OnePlus 13) போனின் கேமரா, வேரியண்ட் மற்றும் கலர் விவரங்கள் வெளியாகி மார்கெட்டை மிரள விட்டுள்ளது. ஏற்கனவே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், சோனி எல்ஒய்டி சென்சார் மெயின் கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, 2K ரெசொலூஷன் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களின் தட்டித் தூக்கி இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 13 போனின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் அக்டோபர் மாத இறுதியில் ஒன்பிளஸ் 13 போன் வெளியாகியது. இந்திய பிரியர்கள் எதிர்பார்க்கும்படியான கேமரா, டிஸ்பிளே மற்றும் பேட்டரி பீச்சர்கள் இருந்ததால், இங்கு எப்போது வெளியாகும் என்று ஒன்பிளஸ் பிரியர்கள் காத்திருந்தனர். 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

OnePlus-ஆல் மிரள போகுது! SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி!

ஏனென்றால், குளோபல் வெளியீடு விரைவில் இருக்கப் போகிறது. ஆகவே, மார்கெட்டில் பீச்சர்கள் கசிய தொடங்விட்டன. இப்போது, மேக்ரோ போட்டோகிராபி பீச்சர் (Macro Photography Feature), 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்களில் வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிளாக் எலிப்ஸ் (Black Eclipse), மிட்நைட் ஓசன் (Midnight Ocean) மற்றும் ஆர்டிக் டவுன் (Arctic Dawn) ஆகிய கலர்களில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் வெளியாகும் வேரியண்ட் அப்படியே குளோபல் வேரியண்ட்டை போலவே இருக்கும் என்பதால், இப்போது மார்கெட்டில் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

இந்த ஒன்பிளஸ் 13 போனின் மற்ற பீச்சர்கள் சீன வேரியண்ட்களை போலவே இருக்கும். ஆகவே, சீனாவில் இந்த போனில் கொடுக்கப்பட்ட பீச்சர்கள் மற்றும் நிர்ணயம் செய்யப்பட்ட விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இது பிரீமியம் செக்மெண்ட்டில் வெளியாகிறது. ஆகவே, இந்தியாவில் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

ஒன்பிளஸ் 13 அம்சங்கள் (OnePlus 13 Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் ஆண்ட்ராய்டு 5 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட் வருகிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் இந்த சிப்செட் அட்ரினோ 830 ஜிபியு கொண்டுள்ளது.

கிரிஸ்டல் சீல்டூ சூப்பர் செராமிக் கிளாஸ் (Crystal Shield Super Ceramic Glass) பாதுகாப்பு கொண்ட 6.82 இன்ச் (3168 × 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.

மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மூன்று கேமராக்களிலும், சோனி எல்ஒய்டி 808 (Sony LYT-808), சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) மற்றும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT600) சென்சார் உள்ளது. இதுவொரு ஹசல்பிளாட் கேமராவாகும். 8K ரெக்கார்டிங் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சாருடந் 32 எம்பி செல்பீ உள்ளது.

இந்த ஒன்பிளஸ் 13 போனில் 6000mAh பேட்டரி, 100W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் இருக்கிறது. மேக்னடிக் சார்ஜிங் (Magnetic Charging) இருக்கிறது. சீனாவில் இந்த போனின் 2 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.53,150 ஆக இருக்கிறது. இந்தியாவில் இதே விலையில் வெளியாகலாம். சற்று குறையும் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus 13 With 12GB RAM Snapdragon 8 Elite Launch January 2025 India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X