Home
Mobile

விட்ராதீங்க சார்.. ரூ.7,400 விலை குறைப்பில் OnePlus 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரூ.69,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் இப்போது விலை குறைப்பு போக வாங்க கிடைக்கிறது. மேலும், பேங்க் தள்ளுபடி கிடைப்பதால், நம்ப முடியாத விலைக்கு வாங்கி கொள்ள முடிகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டில் விலை ரூ.69,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.63,849 விலைக்கு கிடைக்கிறது. மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.62,599 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.7,000 விலைக்கும் மேல் டிஸ்கவுண்ட்டில் வாங்கி கொள்ளலாம்.

விட்ராதீங்க சார்.. ரூ.7,400 விலை குறைப்பில் OnePlus 5ஜி போன்.. மாடல்?

ஒன்பிளஸ் 13 அம்சங்கள் (OnePlus 13 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் போன் கொண்டுள்ளது. கூடவே, அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கிறது. 4 ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்டுள்ளது.

மேலும், ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 3168 x 1440 பிக்சல்களுடன் 2K ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்து உள்ளது.

டால்பி விஷன் (Dolby Vision) கிடைப்பதால், அல்ட்ரா பிரீமியம் ஓடிடி மற்றும் வீடியோ அனுபவத்தை பெறலாம். இந்த டிஸ்பிளேவுக்கு கிரிஸ்டல் ஷீல்டு சூப்பர் செராமிக் (Crystal Shield Super Ceramic) கிளாஸ் புரொடெக்சன் கிடைக்கிறது. 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உள்ளது.

பிரைமரி கேமராவுக்கு ஓஐஎஸ் டெக்னாலஜி சப்போர்ட் உள்ளது. மேலும், சோனி எல்ஒய்டி 808 (Sony LYT 808) சென்சார் கிடைக்கிறது. மேலும், அல்ட்ரா வைடு கேமராவில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) மற்றும் பெரிஸ்கோப் கேமராவில் சோனி எல்ஒய்டி600 (Sony LYT600) சென்சாரும் ஓஐஎஸ் டெக்னாலஜியும் கிடைக்கிறது. மேலும், 3X ஆப்டிகல் ஜூமிங் செய்து கொள்ளலாம்.

6X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 120X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொடுக்கிறது. இந்த ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System) வழியாக 4K மட்டுமல்லாமல், 8K ரெசொலூஷனில் வீடியோக்களை ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். 32 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் மற்றும் 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது.

பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் அண்டர் வாட்டர் போட்டோகிராபி கொடுக்கும்படி IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுத்துள்ளது. இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மட்டுமல்லாமல், 4 மைக்ரோபோன்கள் கிடைக்கிறது. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது.

இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனுக்கு 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மிட்நைட் ஓசன் (Midnight Ocean) மற்றும் பிளாக் எலிப்ஸ் (Black Eclipse) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். இதில் அலெர்ட் ஸ்லைடர கொடுக்கப்பட்டு இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 With 12GB RAM Price Drop on Flipkart Check Discount Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X