Home
Mobile

புதுசு வருதுனு.. பழசுக்கு ரூ.7,500 மேல ரேட் கட்.. 6000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதால், முந்தைய மாடலான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனுக்கு நேரடி விலை குறைப்பு கிடைக்கிறது. இதுபோக பேங்க் தள்ளுபடி கிடைப்பதால், இதுவரை கிடைக்காத விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.69,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.62,493 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,500 விலைக்கும் மேல் தள்ளுபடி கிடைக்கிறது. இதுபோக ரூ.3,125 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.59,638 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

புதுசு வருதுனு.. பழசுக்கு ரூ.7,500 மேல ரேட் கட்.. 6000mAh பேட்டரி!

ஒன்பிளஸ் 13 அம்சங்கள் (OnePlus 13 Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. செராமிக் ஷீல்டு (Crystal Shield) புரொடெக்சன் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) கிடைக்கிறது. 4 ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 880 (SONY LYT 808) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது.

மேலும், 50 எம்பி (114 டிகிரி) அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கிடைக்கிறது. மேக்ரோ சப்போர்ட் கிடை்ககிறது. 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் சோனி எல்ஒய்டி600 (SONY LYT600) சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி வருகிறது. மேலும், 3X ஆப்டிகல் ஜூமிங் செய்து கொள்ளலாம். இதுபோக 120X டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். 4K மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது. ஆகவே, இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் பட்ஜெட்டுக்கு ஏற்ப அல்ட்ரா பிரீமியம் கேமரா அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

சோனி ஐஎம்எக்ஸ்615 (SONY IMX615) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. டிஸ்பிளே மற்றும் கேமரா அவுட்புட்டுக்கு ஏற்ப பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது. இதுபோக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 4 மைக்ரோபோன்களை கொடுக்கிறது. இன்பிராரெட் சென்சாருடன் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே சென்சார் கிடைக்கிறது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ மற்றும் வை-பை 7 கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ப்ளூடூத் 5.4, டூயல் பேண்ட் ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி உள்ளது. மிட்நைட் ஓசன் (Midnight Ocean), ஆர்டிக் டவுண் (Artic Down) மற்றும் பிளாக் எலிப்ஸ் (Black Elipse) கலர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 With 12GB RAM Available Under Rs 60000 Ahead Of OnePlus 15 Launch Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X