Home
Mobile

அதிரவிடும் OnePlus.. 24ஜிபி ரேம்.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது புதிய போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த மாதம் துவக்கத்தில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகம் செய்யப்பட சில வாரங்களில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் 13 போனின் ரேம் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 13 அம்சங்கள் (OnePlus 13 Specifications): 24ஜிபி ரேம் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1டிபி வரை இந்த ஸ்மாரட்போனுக்கு ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரவிடும் OnePlus.. 24ஜிபி ரேம்.. சோனி கேமரா.. வருகிறது புதிய போன்..

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 4 chipset) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 13 போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

50எம்பி சோனி எல்ஒய்டி-808 கேமரா சென்சார் (Sony LYT-808 camera sensor) + 50எம்பி டெலிபோட்டோ சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.8-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் புதிய ஒன்பிளஸ் 13 போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த டிஸ்பிளேவில் 1440x3168 பிக்சல்ஸ், கர்வ்டு எட்ஜ்கள் (Curved Edges), 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங் (IP69 Rating) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் (ultrasonic fingerprint scanner) வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரவிடும் OnePlus.. 24ஜிபி ரேம்.. சோனி கேமரா.. வருகிறது புதிய போன்..

6000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த சாதனத்தை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே விரைவாக இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் 5ஜி, வைஃபை, ஜபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. குறிப்பாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.65,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

photo credit: OnePlusClub, androidheadlines.com

Best Mobiles in India

English summary
OnePlus 13 will be launched with 24GB RAM: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X