டேய் யார்ரா நீங்கலாம்.. OnePlus 13-ன் Unboxing Video.. இது தான் விலை.. இதெல்லாம் முக்கிய அம்சங்கள்!
ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன், இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது அக்டோபர் 31 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் ஒன்பிளஸ் 13 அன்பாக்சிங் வீடியோ (OnePlus 13 unboxing video) ஒன்று யூட்யூப்பில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
குறிப்பிட்ட அன்பாக்சிங் வீடியோவானது ஸ்பேரோஸ் நியூஸ் (Sparrows News) என்கிற யூட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது. அதன்மூலம் இன்னும் அறிமுகம் செய்யப்படாத ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை அனைத்து கோணங்களிலும் பார்க்க முடிகிறது. அந்த வீடியோவில் ஒன்பிளஸ் 13 ஆனது நிறுவனத்தின் "வழக்கமான" ரெட் பாக்ஸில்" வருவதை பார்க்க முடிகிறது. பாக்ஸின் அடிப்பகுதியில், இந்த குறிப்பிட்ட மாடலில் 24 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.

பின்னர் ரெட் பாக்ஸை திறந்த பின்னர், அதன் உள்ளே ஒயிட் கலர் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனையும் அதன் பேக் பேனலில் - பெரிய வட்ட வடிவ கேமரா பேனலை காண முடிகிறது. கூடவே ஹசால்பிளாட்டின் பங்களிப்பை குறிக்கும் 'எச்' லோகோவையும் பார்க்க முடிக்கிறது. முன்பக்கத்தில் ஒரு பிளாட் ஆன டிஸ்பிளே உள்ளது.
அடுத்தாக அன்பாக்ஸிங் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) செயல்பாட்டில் இருப்பதை காண முடிகிறது. அறியாதோர்களுக்கு கலர்ஓஎஸ் 15 அப்டேட் வழியாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கு புதிய லீக் ஸ்க்ரீன் தோற்றம், விட்ஜெட்டுகள், வால்பேப்பர்கள், ஐகானோகிராபி, ஐபோன் போன்ற டைனமிக் ஐலண்ட் வகை நோட்டிஃபிகேஷன்மற்றும் சிரி போன்ற ஏஐ சாட்போட் ஆகிய அம்சங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அன்பாக்சிங் வீடியோ ஒருபக்கம் இருக்க டெக்ஹோம் (TechHome) என்கிற எக்ஸ் பக்கம் வழியாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் சீன விலை நிர்ணயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சீனாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 4699 யுவான் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.55,440) என்கிற விலை நிர்ணயத்தை பெறும்.
இது சீனாவில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விலையை விட 400 யுவான் அதிகமாகும். இது, ஒன்பிளஸ் 13 ஆனது ஒன்பிளஸ் 12 மாடலை விட சுமார் 10% சதவீதம் அதிக விலை நிர்ணயத்தை கொண்டிருக்கலாம் என்கிற தகவலுக்கு மேலும் வலுசேர்க்கிறது. ஆனால் இதே விலையை நாம் இந்திய சந்தையில் எதிர்பார்க்க கூடாது.
சீன சமூக ஊடக தளமான வெய்போ (Weibo) வழியாக வெளியான சமீபத்திய லீக் தகவலானது, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் +512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.77,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று பரிந்துரைக்கிறது. இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விலையான ரூ.‚69,999 உடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகும்.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டிருக்கும் முதல் சில ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ருக்கும். பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை இது 6,000mAh பேட்டரியை உள்ளடக்கியதாக வதந்தி பரவுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் முந்தைய மாடலில் இருந்த 5,400mAh பேட்டரியில் இருந்து கணிசமான அதிகரிப்பாக இருக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஆனது போன் 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா சென்சார்களை பொறுத்தவரை , இது சோனியின் LYT-808 சென்சார் மற்றும் எப்/1.6 அபெர்ச்சர் உடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டிருக்கலாம்.
Photo Credits: OnePlus Club (@OnePlusClub - X) | Source: Sparrows News (@SparrowsNews - YouTube) and Tech Home (@TechHome100 - X)


Click it and Unblock the Notifications








