Home
Mobile

ப்பா.. 24GB ரேம், மூன்று 50MP கேம், 6000mAh பேட்டரி-ஆ.. OnePlus 13 விலைய சொன்னா நம்புவீங்களா?

OnePlus 13 Launch: மிகவும் எதிர்பார்த்தபடியே (அதாவது 2 மாதங்களுக்கு முன்பாகவே) ஒன்பிளஸ் 13 அறிமுகமாகிறது. இதை ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லூயிஸ் லீயும் உறுதிப்படுத்தி உள்ளார். முன்னதாக இது டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் அறிமுகமாகி, பின்னர் ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இது அக்டோபர் மாத வாக்கிலேயே சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒன்பிளஸ் 13-ன் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த சில "நம்பகமான" தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் 13-ன் டிசைன் மற்றும் டிஸ்பிளே: வடிவமைப்பை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஆனது அதன் முன்னோடிகளில் காணப்பட்ட கேமரா டிசைனில் இருந்து விலகி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா ஐலேண்ட் (Redesigned Camera Island) உடன் புதிய லுக்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸின் மற்ற பிளாக்ஷிப் போன்களை போலவே இதுவும் 2கே ரெசல்யூஷன் டிஸ்பிளேவை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

OnePlus 13 விலைய சொன்னா நம்புவீங்களா?

ஒன்பிளஸ் 13-ல் பிஓஇ எக்ஸ்2 (BOE X2) டிஸ்பிளே இடம்பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு குறிப்பிடத்தக்க புதிய அம்சமாக - அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic Fingerprint Sensor) சேர்க்கப்படலாம். இது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் காணப்படும் ஆப்டிகல் சென்சார்களுடன் ஒப்பிடும்போது வேகமான மற்றும் பாதுகாப்பான அன்லாக்கை உறுதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 13-ன் ரேம்: இது"அதிக பட்சமாக" 24ஜிபி வரையிலான ரேம் (24GB RAM) உடன் வரும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. இது மொபைல் பெர்ஃபார்மென்ஸில் மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும். குறிப்பாக ஏஐ ஆப்கள் மற்றும் கேமிங் போன்ற ஹை ப்ராசஸிங் பவரை கோரும் டாஸ்க்குகளின் போது ஒன்பிளஸ் 13-ஐ ஸ்மூத் ஆக இயக்கும்.

ஒன்பிளஸ் 13-ன் கேமராக்கள்: ஒன்பிளஸ் 13-ன் கேமரா செட்டப் ஆனது குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இமேஜ் ப்ராசஸிங் அல்காரிதம் (Image Processing Algorithm) ஆனது ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரிஸ் (Oppo Find X8 Series) உடன் ஒற்றுப்போக வாய்ப்புள்ளது. கூடவே ஒன்பிளஸ் நிறுவனம் ஹசல்பிளாட் (Hasselblad) உடனான நீண்டகால கூட்டாண்மையும் தக்கவைத்துக்கொள்ளும்.

சில நம்பகமான அறிக்கைகளில், ஒன்பிளஸ் 13 ஆனது சோனி LYT-808 சென்சார் மற்றும் எப்/1.6 அபெக்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கும். இதன் கேமரா செட்டப்பில் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் பேக் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் 13-ன் பேட்டரி: மற்றொரு சமீபத்திய அறிக்கை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய 6,000mAh பேட்டரி பேக் செய்யப்படும் என்று பரிந்துரைக்கிறது. இது 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், வேகமான சார்ஜிங் மற்றும் நீட்டிக்கப்பட்ட பேட்டரி லைஃப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் பயனர்கள் மத்தியில் ஒன்பிளஸ் 13 நிச்சயம் ஹிட் அடிக்கும்!

ஒன்பிளஸ் 13-ன் விலை: விலையை பொறுத்தவரை, இது ஒன்பிளஸ் 12-க்கு சமமான விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 இந்தியாவில் ரூ.64,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ரூ.65,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம். ஆனால் ஒன்பிளஸ் 13-ன் முக்கிய மேம்பாடுகளை கருத்தில் கொண்டால், விலையில் சில ஆயிரங்கள் அதிகரிப்பை நாம் காணலாம். இப்போதைக்கு இது ரூ.70,000 க்குள் என்கிற விலைக்கு வரும் என்று எதிர்பார்ப்பது நல்லது!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 To Launch in October 2024 Design Display Camera Chipset Battery Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X