Home
Mobile

OnePlus 13-க்காக வெயிட் பண்ணது வீண் போகல.. 1 மாசத்துக்கு முன்பே அறிமுகம்.. அதே விலை.. ஆனா வேற மாறி டிசைன்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் விலை சீரீஸ்களான நோர்ட் மற்றும் ஆர் சீரீஸ் மாடல்கள் மீது உங்களுக்கு பெரிய அளவில் ஆர்வமில்லை என்றால்.. உங்களுடைய முழு கவனமும் ஒன்பிளஸின் நம்பர் சீரிஸ் மீது மட்டுமே இருந்தால்.. ஒன்பிளஸ் 13 (OnePlus 13) பற்றிய அறிமுகம் உங்களுக்கு தேவைப்படாது. ஒன்பிளஸ் 12-ன் அப்கிரேடட் வெர்ஷன் ஆக ரெடியாகும் ஒன்பிளஸ் 13 ஆனது.. சுவாரசியமாக 1 மாதத்திற்கு முன்பாகவே அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. இது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் லான்ச் டைம்லைன்: நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் அறிமுகமானது. பின்னர் 2024 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகமானது. இதே லான்ச் டைம்லைனை தான் ஒன்பிளஸ் 13 மாடலும் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

OnePlus 13-க்காக வெயிட் பண்ணது வீண் போகல!

ஆனால் சீன சமூக ஊடகத்தளமான வெய்போ வழியாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் கிடைத்த லேட்டஸ்ட் தகவலின்படி, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் சீன அறிமுகமானது 2024 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் அறிமுகமாகும். அதாவது எதிர்பார்க்கப்பட்டதை விட கிட்டத்தட்ட 1 மாதத்திற்கு முன்பே ஒன்பிளஸ் 13 அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

அதாவது விவோ எக்ஸ்200 சீரீஸ் (Vivo X200 Series), ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் (OPPO Find X8 Series), ஷாவ்மீ 15 (Xiaomi 15), ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) மற்றும் ரெட்மி கே80 சீரீஸ் (Redmi K80 Series) போன்ற ஸ்மார்ட்போன்கள் எல்லாமே ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்பது போல் தெரிகிறது. மேற்கண்ட ஸ்மார்ட்போன்களும் கூட 2024 அக்டோபர் மற்றும் நவம்பர் என்கிற லான்ச் டைம்லைனை கொண்டுள்ளன.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் என்ன மாதிரியான டிசைன் அப்கிரேட்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிசிஎஸ்-ன் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் உள்ள கேமரா யூனிட்டை சுற்றி.. மேல் இடது மூலையில் ஹிஞ் (Hinge) இல்லாமல் ஒரு ரவுண்ட் டெக்கோ (Round DECO) இடம்பெறும். ஆனால் கேமரா லென்ஸ்களின் பிளேஸ்மென்ட் ஆனது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் நாம் பார்த்ததைப் போலவே இருக்கும்.

மேலும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முன்பக்கமானது நான்கு மூலைகளிலும் கர்வ்டு டிஸ்பிளே டிசைனை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரசியமாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது செராமிக் பாடிக்கு பதிலாக கிளாஸ் பாடியை கொண்டிருக்கும் என்றும் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சிப்செட் குறித்த விவரங்களை தவிர்த்து ஒன்பிளஸ் 13 அம்சங்கள் குறித்து வேறெந்த விவரங்களும் பெரிதாக லீக் ஆகவில்லை. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 4 Chipset) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? டிப்ஸ்டர் டிசிஎஸ்-ன் கூற்றுப்படி குவால்காம் அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப்செட்களுடன் (MediaTek Dimensity 9400 Chipsets) வரும் என எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ், ஒப்போ, விவோ, ஷாவ்மீ மற்றும் ரியல்மி போன்ற பிராண்டுகளின் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் கணிசமான விலை உயர்வை காணாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஆனது ஒன்பிளஸ் 12-க்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது - 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ். இவைகள் முறையே ரூ.64,999 மற்றும் ரூ.69,999 க்கு அறிமுகமாகின. இதேபோன்ற (ரூ.65,000 - ரூ.70,000) விலை நிர்ணயத்தை நாம் ஒன்பிளஸ் 13 மாடலிலும் எதிர்பார்க்கலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 to launch between October and November 2024 Design Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X