OnePlus 13 ரெடி.. மொத்த மார்க்கெட்டும் மிரண்டு போகும் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலை இந்த அக்டோபர் மாதமே அறிமுகம் செய்வோம் என்று அறிவித்தாலும் அறிவித்தது, ஒவ்வொரு நாளும் ஒன்பிளஸ் 13 தொடர்பான அப்டேட்கள் வெளியான வண்ணம் உள்ளன. மிகவும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்ட டிஸ்பிளே, குவால்காமின் லேட்டஸ்ட் மற்றும் பிளாக்ஷிப் சிப்செட் போன்ற முக்கிய அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேட்டரி கெப்பாசிட்டி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஏற்கனவே அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் பெரிய பேட்டரியை கொண்டிருந்தாலும், ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது இன்னும் பெரிய திறனை பேக் செய்ய உள்ளது. 91மொபைல்ஸ் (91mobiles) வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, சீனாவின் TAF சான்றிதழ் ஆவணங்களில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது.

அந்த ஆவணங்கள் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 5,840mAh என மதிப்பிடப்பட்ட மொத்த திறன் கொண்ட டூயல் செல் பேட்டரியை கொண்டிருக்கும். ஆக இது சுமார் 6,000mAh என்று குறிப்பிடப்படும். இது அதன் முன்னோடியை விட (அதாவது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை விட) 10% அதிகமாகும். இந்த அதிகரிப்பு ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுளை வழங்கும் என்பதும் சந்தேகமே வேண்டாம்.
6100எம்ஏஎச் பேட்டரியை கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவில் பயன்படுத்திய போக்கை பின்பற்றி, ஒன்பிளஸ் நிறுவனமானது தொடர்ந்து பெரிய பேட்டரிகளில் கவனம் செலுத்துகிறது. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் 6000எம்ஏஎச் பேட்டரி ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் மேக்னட் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை - டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலானது - ஒன்பிளஸ் 13 ஆனது 2கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான BOE X2 "ஓரியண்டல்" டிஸ்பிளேவை பெறும் என்றும், அது ஒரு "சூப்பர் செராமிக் கிளாஸ்" அமைப்பை கொண்டிருக்கும் 8T LTPO பேனல் ஆக இருக்கும் என்றும் பரிந்துரைக்கிறது
ஒன்பிளஸ் 13-ன் டிஸ்பிளேவிற்குள் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறுலாம் என்றும், இது சூப்பர் ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் சாஃப்ட் எட்ஜ் ஃபோர்-லெவல் டெப்த் போன்ற அம்சங்களை ஆதரிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 13-ன் டிஸ்பிளேயின் சர்க்யூட்ரி ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு அதன் ஆப்டிகல் கேவிட்டி அமைப்பு மறுசீரமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை - ஒன்பிளஸ் 13 டிஸ்பிளேவின் ப்ரைட்னஸ் மற்றும் பேட்டரி லைஃப்பில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். சுவாரசியமாக ஒன்பிளஸ் 13-ல் பல்ஸ் விட்த் மாடுலேஷன் (பிடபிள்யூஎம்) டிம்மிகிங்கிற்கான புதிய சொல்யூஷனும் கொண்டுவரப்படவுள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி-ஐ (Snapdragon 8 Elite SoC) பேக் செய்யலாம். இது அக்டோபர் 22 ஆம் தேதி அன்று குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டின் போது அறிமுகம் செய்யப்படவுள்ளது
ஒன்பிளஸ் தவிர, சில போட்டியாளர் பிராண்டுகளும் கூட வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி மூலம் இயங்கும் தங்களின் சமீபத்திய ஃபிளாக்ஷிப்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. ஒன்பிளஸ் 13 ஆனது ஷாவ்மீ 15 சீரீஸ் (Xiaomi 15 Series), ஹானர் மேஜிக் 7 சீரீஸ் (Honor Magic 7 Series) மற்றும் ஐக்யூ 13 (iQOO 13) போன்றவற்றுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இவை அனைத்துமே அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








