பொருளு அந்த மாறி வர்மா.. அந்த 36 நிமிஷம் மேட்டர் தான் ஹைலைட்.. OnePlus 13-ன் மொத்த அம்சங்களும் அறிவிப்பு!
அடுத்த 2 - 3 மாதங்களுக்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள.. பெரும்பாலான நிறுவனங்களின் மைண்ட் வாய்ஸ்ஸும் இப்போது என்னவாக இருக்குமென்று தெரியுமா? - "நம்மள முடிச்சு விட்டாங்க போங்க" என்பதாகத்தான் இருக்கும்! ஏனென்றால் அக்.31 ஆம் தேதி அறிமுகமாகும் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் (கிட்டத்தட்ட) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவைகளை பார்க்கும்போது "பொருளு அந்த மாறி வர்மா!" என்கிற குரல் உங்கள் தலைக்குள் ஒலித்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. உண்மையிலேயே ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அப்படித்தான் உள்ளன. ஆக இதன் விலையும் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். இது அப்படி என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

அக்டோபர் 31 அன்று நடக்க உள்ள சீன அறிமுகத்திற்கு முன்னதாகவே, ஒன்பிளஸ் பிராண்ட் ஆனது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது. ஒன்பில்ஸ் பிராண்டால் வெளியிடப்பட்ட போஸ்டர்களின் வழியாக - ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவு, சார்ஜிங் திறன்கள் உட்பட பல விவரங்கள் உறுதிப்படுத்திப்பட்டுள்ளன.
ஒன்பிளஸ் 13-ன் முதல் போஸிடர் வழியாக இது 6,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதன் பொருள் ஒன்பிளஸ் 13 ஆனது இதுவரை நாம் பார்த்த எந்தஒன்பிளஸ் மாடலில் இல்லாத அளவிலான மிகப்பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும். இரண்டாவது போஸ்டர் ஆனது, இது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. இதில் இடம்பெறும் 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆனது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் 6000எம்ஏஎச் பேட்டரியை வெறும் 36 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீதம் வரை நிரப்புமாம். உண்மையிலேயே இது ஒரு அட்டகாசமான யுஎஸ்பி (USP - Unique selling proposition) ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
கூடுதலாக, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 100W UFCS (யுனிவர்சல் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டாண்டர்ட்) நெறிமுறையையும் ஆதரிக்கிறது, இது மூன்றாம் தரப்பு அடாப்டர்களுடன் கூட பாஸ்ட் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர்வூக் எஸ் சிப் ஒருங்கிணைப்பும் உள்ளது, இது 99.5% தீஸ்சார்ஜ் செயல்திறனை வழங்குகிறது. இதன் மூலம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேட்டரி அவுட்புட் ஆனது திறமையாக மேம்படுத்தப்படும்.
ஒன்பிளஸ் பிராண்டால் வெளியிடப்பட்ட மற்ற போஸ்டர்கள் ஆனது, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் இடது பக்கத்தில் ஒரு அலெர்ட் ஸ்லைடர் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. கூடுதலாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் - ஐஆர் பிளாஸ்டர், மல்டி-ஃபங்க்ஸ்னல் என்எப்சி மற்றும் வேகமான டேட்டா பரிமாற்றத்திற்காக யூஎஸ்பி 3.2 ஜென் யூஎஸ்பி-சி போர்ட் போன்ற அம்சங்களையும் காணமுடிகிறது.
இது தவிர, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஏஐ நாய்ஸ் ரிடெக்ஷனிற்கான நான்கு மைக்ரோஃபோன்கள், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்பிளஸ் ஓஎஸ் 15 போன்றவைகளையும் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும்.
அதில் 50-மெகாபிக்சல் LYT-808 ப்ரைமரி கேமரா + ஓஐஎஸ் ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும். டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82-இன்ச் 2கே ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
கடைசியாக இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படும். 2024 ஆம் ஆண்டின் இறுதி மற்றும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்த சிப்செட்டின் பெயரை நீங்கள் அடிக்கடி கேட்பீர்கள். அந்த அளவிற்கு இது பிரபலமாகும் என்று எதிர்பார்க்கிறோம். சீன அறிமுகத்தை தொடர்ந்து, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும்போது போது, இது ரூ.77,000-ஐ சுற்றிய விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








