Home
Mobile

என்னது ரூ.41,870-ஆ.. OnePlus 13-ன் Repair Cost-ஐ கேட்டு சிதறி ஓடிய சீனர்கள்.. அலெர்ட் ஆகும் இந்தியர்கள்!

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ரிப்பேர் காஸ்ட் (OnePlus 13 Repair Cost), அதாவது எந்தெந்த பாகங்கள் பழுது அடைந்தால் அல்லது சேதம் அடைந்தால் அல்லது தேய்மானம் ஏற்பட்டால்.. அதை சரி செய்ய எவ்வளவு செலவு ஆகும் என்கிற அதிகாரப்பூர்வ விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அக்.31 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13 ஆனது அடுத்த சில மாதங்களில் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில்.. இதன் ரிப்பேர் காஸ்ட் விவரங்கள் வெளியாகி ஒன்பிளஸ் 13-ஐ வாங்க திட்டமிட்டுள்ள உள்ளவர்களையும், இந்த ஸ்மார்ட்போனிற்காக ஆர்வமாக காத்திருப்பவர்களையும் "அலெர்ட்" செய்துள்ளது. ஒன்பிளஸ் 13 ரிப்பேர் ஆனால் அப்படி எவ்வளவு செலவு ஆகும்? இதோ விவரங்கள்:

OnePlus 13-ன் Repair Cost கேட்டு சிதறி ஓடிய சீனர்கள்!

ஸ்கிரீன் அசெம்பிளி - சீனாவில் 1,650 யுவான் செலவாகும், அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.19,460 செலவாகும்.
பேட்டரி கவர் அசெம்பிளி - சுமார் ரூ.4,600 செலவாகும்.
பேட்டரி - சுமார் ரூ.2,350 செலவாகும்.
செல்பீ கேமரா - சுமார் ரூ.1,890 செலவாகும்.

50எம்பி ரியர் அல்ட்ரா வைட் கேமரா - ரூ.1,770 செலவாகும்.
50எம்பி ரியர் வைட் கேமரா - ரூ.4,720 செலவாகும்.
50எம்பி ரியர் டெலிஃபோட்டோ கேமரா - ரூ.3,420 செலவாகும்.
பவர் அடாப்டர் (11V 9.1A) - ரூ.2,590 செலவாகும்.
டேட்டா கேபிள் - ரூ.580 செலவாகும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மாதர்போர்டு - சுமார் ரூ.27,720 செலவாகும்.
12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மாதர்போர்டு - சுமார் ரூ.31,250 செலவாகும்.
16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மாதர்போர்டு - சுமார் ரூ.33,610 செலவாகும்.
24ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மாதர்போர்டு - சுமார் ரூ.41,870 செலவாகும்.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது சிப்செட்டை பொறுத்தவரை ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்மை கொண்டுள்ளது. 24ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 1டிபி வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது

கேமராக்களை பொறுத்தவரை ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° பிஓவி உடனான 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராஆகியவைகளை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதுதவிர்த்து இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், அகச்சிவப்பு சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 + IP69 ரேட்டிங் ஆகியவைகளையும் கொண்டுள்ளது

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் சீன விலை விவரங்கள்: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் சீனாவில் 4499 யுவான்களுக்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.53,150 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.57,875 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் + 512ஜி ஆப்ஷன் ரூ.62,590 க்கும் மற்றும் கடைசியாக உள்ள 24ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் ரூ.70,860 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய விலை நிர்ணயம் இதை விட மிகவும் அதிகமாக இருக்கும்என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.77,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 13 Repair Cost How much you need to spend on Motherboard display camera battery repair
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X