Home
Mobile

அப்படி வா வழிக்கு.. ரூ.6000, ரூ.7000 இல்ல அதுக்கும் மேல.. OnePlus 13 மீது நேரடி விலை குறைப்பு!

ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் மிகவும் நெருக்கமாக உள்ள நிலைப்பாட்டில், முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் மீது பெரிய அளவிலான நேரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அறியாதோர்களுக்கு ஒன்பிளஸ் 15 ஆனது வருகிற நவம்பர் 13 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்கிடையில் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளங்கள் ஆன பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) ஆகிய இரண்டுமே ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மீது விலை குறைப்பை அறிவித்துள்ளன. ஆனால் பிளிப்கார்ட் தான் அதிகமான விலை குறைப்பை அறிவித்துள்ளது. தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 13 மீது ரூ.7500 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது.

அப்படி வா வழிக்கு.. OnePlus 13 மீது விலை குறைப்பு!

இதன் மூலம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலையான ரூ.69,999 ஆனது ரூ.62,499 ஆக குறைந்துள்ளது. இது எந்த வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டும் இல்லாத நேரடி விலை குறைப்பாகும். இதேபோல அமேசான் இந்தியாவும் ஒன்பிளஸ் 13 மீது ரூ.6000 நேரடி தள்ளுபடியை வழங்குகிறது. அதாவது அமேசானில் தற்போது இது ரூ.69,999 க்கு பதிலாக ரூ.63,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளே
- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 32எம்பி செல்பீ கேமரா

- 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 50W வயர்லெஸ் சார்ஜிங்
- மேக்னட்டிக் சார்ஜிங் ஆதரவு
- 6000mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங்

நவம்பர் 13 வரும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? சீனாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.50,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ரூ.65,000 - ரூ.75,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 165ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளே
- அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்

- ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 24மிமீ குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி ஷூட்டர்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா

- 7300mAh பேட்டரி
- 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் ஆதரவு
- 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு
- இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 Price Reduced in Both Flipkart Amazon Ahead OnePlus 15 India Launch on November 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X