Home
Mobile

கடைசி நேரத்துல காலை வாரிட்டாங்க.. OnePlus 13-க்கு எக்ஸ்ட்ரா ரூ.6000.. 2 அப்கிரேட்.. அதனால அதே விலை இல்லையாம்!

ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் குறித்த சமீபத்திய தகவல், அதை வாங்க ஆர்வமாக காத்திருந்த பலரையும் 'ஆஃப்' செய்துவிட்டது என்றே கூறலாம். "நேற்று வரையிலாக" ஒன்பிளஸ் 12 மாடலுக்கும் ஒன்பிளஸ் 13 மாடலுக்கும் பெரிய அளவிலான விலை வித்தியாசம் இருக்காது; கிட்டத்தட்ட ஒரே ப்ரைஸ் ரேன்ஞ்சில் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "தற்போது" அப்படி நடக்காது என்பது போல் தெரிகிறது. 2 முக்கிய அப்கிரேட்களின் காரணமாக இது ரூ.6000 (500 யுவான்) வரையிலான விலை அதிகரிப்பை காணலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம், சீனாவை தளமாக கொண்ட பிஓஇ (BOE) உடன் இணைந்து, அதன் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கான ஸ்கிரீன் வெளியீட்டு மாநாட்டை அக்டோபர் 15 அன்று நடத்துகிறது. இந்நிகழ்வின் போது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் இடம்பெறவுள்ள புதிய டிஸ்பிளே அறிமுகம் செய்யப்படவுள்ளது.

OnePlus 13-க்கு எக்ஸ்ட்ரா ரூ.6000..  2 அப்கிரேட்!

இதற்கிடையில் ஒரு டெக் பிளாக்கர் ஆன காய் ஸுஸ்வன் (Tech blogger Cai Zuxuan), ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் அட்வான்ஸ்டு டிஸ்பிளே மற்றும் புதிய சிப்பை சேர்ப்பதன் விளைவாக இது விலை உயர்வை காணும் என்று கூறி உள்ளார். ஒன்பிளஸ் பிராண்டின் படி, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது இரண்டாம் தலைமுறை 2கே ஓரியண்டல் ஸ்கிரீன் (Second-generation 2K Oriental Screen) அதாவது பிஓஇ எக்ஸ்2 (BOE X2) டிஸ்பிளேவை பேக் செய்யும்.

இது உலகின் முதல் டிஸ்ப்ளேமேட் A++ சான்றிதழை பெற்றுள்ள டிஸ்பிளே என்பதும் மற்றும் ஈர்க்கக்கூடிய 21 டிஸ்பிளே ரெக்கார்ட்களை செய்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சில நம்பகமான அறிக்கைகளின்படி, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 6.82-இன்ச் BOE X2 8T LTPO பேனலை பேக் செய்யும் மற்றும் மைக்ரோ-குவாட்-கர்வ்டு வடிவமைப்பு மற்றும் அல்ட்ரா-தின் ஈக்வல் ஸைஸ்டு பெசல்களை கொண்டிருக்கும்.

மேலும் ஒன்பிளஸ் 13 டிஸ்பிளேவானது 3168 x 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் தீர்மானம் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. சுவாரசியமாக இதில் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை கொண்டிருக்கும், ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாகவும் இருக்கலாம்.

வருகிற ஜனவரி 2025 இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (Oppo Find X8 Ultra) ஸ்மார்ட்போனில் கூட இதே டிஸ்பிளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்பிளே குறித்த மேலதிக விவரங்கள் அக்.15 நடைபெறும் நிகழ்வின் மூலம் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலையை மேலும் அதிகரிக்கும் மற்றும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் - குவால்காம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite Chipset) ஆகும். இந்த சிப்செட்டை பேக் செய்யும் முதல் சில போன்களில் ஒன்பிளஸ் 13 மாடலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்றே முன்னதாக அறிமுகமாகும் ஐக்யூ 13 மாடலிலும் கூட இதே சிப்செட் தான் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் இடம்பெறவுள்ள புதிய டிஸ்பிளே மற்றும் புதிய சிப்செட் காரணமாக, இது ஒன்பிளஸ் 12 மாடலை விட விலை உயர்ந்ததாக இருக்கும் என்று காய் ஸுஸ்வன் நம்புகிறார்.

முன்னரே குறிப்பிட்டபடி, ஆரம்ப கால லீக்ஸ்-களில் இருந்து கடந்த வாரம் வரையிலாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஒன்பிளஸ் 12 (ரூ.65,000) உடன் ஒற்றுப்போகும் என்றே கூறப்பட்டது. ஆனால் ஒன்பிளஸ் 13-ல் இடம்பெறும் முக்கிய அப்கிரேட்களின் விளைவாக, இதன் விலை ரூ.70,000 வரை செல்லலாம் என்று நாங்கள் யூகித்து இருந்தோம், தற்போது அது உண்மையாகும் என்பது போல் தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 Price Higher Than OnePlus 12 Due to BOE X2 Display Snapdragon 8 Elite Chipset
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X