Home
Mobile

ரூ.7000 விலை குறைப்பு.. திடீர்னு ஆர்டர்களை அள்ளும் 6000mAh பேட்டரி கொண்ட OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இப்போதைக்கு எந்த புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யாது. மிட்-ரேன்ஜ் மாடல்கள் ஆன ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸ் (OnePlus Nord 5 Series) போன்களும் அறிமுகம் ஆகிவிட்டன, அதற்கு முன்னர் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (மினி ஸ்மார்ட்போன்) ஆன ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலும் அறிமுகம் ஆகிவிட்டது.

இதோடு ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடல் தான் (4 என்கிற எண் இருப்பதால் ஒன்பிளஸ் 14 அறிமுகம் செய்யப்படாடது). இதுவும் கூட 2025 டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் அறிமுகமாகி, இந்தியாவிற்கு வர எப்படியம் 2026 ஜனவரி ஆகிவிடும். ஆக அதுவரையிலாக.. சுதந்திர தின ஆபர் தொடங்கி நியூ இயர் ஆபர் வரையிலாக.. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் மழை பொழியும்.

ரூ.7000 விலை குறைப்பு.. 6000mAh பேட்டரி கொண்ட OnePlus போன்!

அதன் தொடக்கமாகத்தான் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 2025 சுதந்திர தின சலுகைகளை (OnePlus 2025 Independence Day Sale Offers) அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் பல்வேறு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகளில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மீதான சலுகை தான் - ஹைலைட்!

இந்த சிறப்பு விற்பனையின் போது, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite Chipset) உடன் வரும் மற்றும் 6000mAh பேட்டரியை (6000mAh battery) பேக் செய்யும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7,000 தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் 9 மாதங்கள் வரை நோ-காஸ்ட் இஎம்ஐ (No-Cost EMI) ஆப்ஷன் அல்லது 11 மாத கால அவகாசத்துடன் பேப்பர் ஃபைனான்ஸும் (Paper Finance) கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 24ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் முறையே ரூ.76,999 மற்றும் ரூ.84,999 க்கும் அறிமுகமானது. ஒன்பிளஸ் சுதந்திர தின சலுகையின் கீழ் ஒன்பிளஸ் 13 மாடலை ரூ.62,999 முதல் என்கிற டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம்.

ஒன்பிளஸ் 2025 சுதந்திர தின விற்பனையின் கீழ் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்? ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.5,000 விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13ஆர் ரூ.42,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகமானது.

ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போன் மீது ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.5,000 வரை வங்கி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரை அனைத்து வேரியண்ட்களின் மீதும் கிடைக்கும் என்று அறிவிக்க்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.54,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

கடைசியாக 2025 ஒன்பிளஸ் சுதந்திர தின விற்பனையின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.2,250 உடனடி வங்கி தள்ளுபடி கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ.31,999 மற்றும் ரூ.24,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 Price Drop by Rs 7000 Temporarily As A Part of OnePlus Independence Day Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X