Home
Mobile

OnePlus 13-ன் ஸ்பெஷல் அம்சம்.. திருடப்பட்டு, Switch OFF செய்தாலும் கூட Location-ஐ கண்டுபிடிக்கலாம்!

2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று திறந்த விற்பனைக்கு வரவுள்ள நிலையில், ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு சுவாரசியமான அம்சம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு அத்தாரிட்டியின் (Android Authority) சமீபத்திய அறிக்கையின்படி ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் பவர்டு ஆஃப் ஃபைண்டிங் (Powered Off Finding) என அழைக்கப்படும் ஆன்ட்டி-தெஃப்ட் அம்சம் (Anti-theft feature) உள்ளது. அதாவது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் திருடப்படுவதற்கு எதிரான ஒரு அம்சம் உள்ளது.

OnePlus 13: திருடப்பட்டு, Switch OFF செய்தாலும் கூட கண்டுபிடிக்கலாம்!

இந்த அம்சத்தின் பெயர் குறிப்பிடுவது போலவே, பயனர்களிடம் இருந்து தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ஆஃப்லைனில் இருந்தாலும் சரி அல்லது அது பவர் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் கூட சரி.. அதற்கு ரிங் செய்யலாம் அல்லது மேப்ஸ் வழியாக லோக்கேஷனை கண்டறியலாம்.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் இந்த அம்சமானது, உரிமையாளரின் டிவைஸ் மற்றும் பைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கில் (Find My Device network) உள்ள மற்றவர்களால் அனுப்பப்பட்ட மறைகுறியாக்கப்பட்ட லோக்கேஷன் தகவலை பயன்படுத்துகிறது. ஒரு ஒன்பிளஸ் 13 மாடல் ஆனது குறிப்பிட்ட நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, ​​அது அருகில் உள்ள டிவைஸ்களின் லோக்கேஷன் தகவலை "பாதுகாப்பாக" அனுப்புகிறது, அதன் மூலம் காணாமல் போன ஒன்பிளஸ் 13-ஐ அதன் உரிமையாளர்களால் எளிதாக கண்டறிய முடியும்.

இந்த அம்சம் வைஃபை 7, ப்ளூடூத் 6.0 மற்றும் அல்ட்ரா வைட்பேண்ட் (யுடபிள்யூபி) திறன்களை ஒருங்கிணைத்து, செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) உதவியுடன் மேம்படுத்தப்பட்ட, ஃபாஸ்ட் கனெக்ட் 7900 மொபைல் கனெக்டிவிட்டி சிஸ்டம் உடனான குவால்காமின் பிளாக்ஷிப் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டின் கீழ் செயல்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் நாளை (ஜனவரி 10) திறந்த விற்பனையை சந்திக்க உள்ளது. ந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.69,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கும்.

இதேபோல 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.76,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் ரூ.71,999 க்கு வாங்க முடியும். கடைசியாக உள்ள ஹை - எண்ட் 24ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.89,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது முன்னரே குறிப்பிட்டபடி இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது: 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் 50எம்பி கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரி உள்ளது. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கான மேக்னெட்டிக் கேஸ்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவைகளும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும். கூடவே ஒன்பிளஸ் 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜரும் அறிமுகமாகி உள்ளது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.69,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.76,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் ரூ.71,999 க்கு வாங்க முடியும்.

கடைசியாக 24ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.89,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த மூன்று வேரியண்ட்களுமே வருகிற 2025 ஜனவரி 10 ஆம் தேதியன்று திறந்த விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடவே 3 வேரியண்ட்கள் மீதும் ரூ.7000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 Powered Off Finding Anti Theft Feature Locate Lost or Stolen Phone Even Its Switched Off
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X