OnePlus 13: யாரும் எதிர்பார்க்காத விலை! அம்புட்டு பேரும் எதிர்பார்த்த Wooden கேஸ், Magnetic Wireless சார்ஜிங்!
ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஆகிய 2 மாடல்களும் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி இந்தியா உட்பட பல உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலைப்பாட்டில், இவ்விரு ஸ்மார்ட்போன்கள் குறித்த ஒரு முக்கியமான மற்றும் சுவாரசியமான விவரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய இரண்டு மாடல்களின் அதிகாரப்பூர்வ மேக்னெட்டிக் கேஸ் ஆப்ஷன்கள் (Official protective case options) வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த கேஸ்கள் ஆனது மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு (Magnetic wireless charging) உடன் வரும்.

இவ்விரு போன்களுமே சாண்ட்ஸ்டோன் மேக்னடிக் கேஸ் (Sandstone Magnetic case) ஆப்ஷனை பெறும், இது சாண்ட் பேப்பர் டெக்சர்டு ஃபினிஷை (sandpaper-textured finish) கொண்டிருக்கும். ஒன்பிளஸ் 13 ஆனது வூட் கிரேன் மேக்னடிக் ஹாஃப் பேக் (Wood Grain Magnetic Half-pack) மற்றும் அராமிட் ஃபைபர் (Aramid Fiber) மேக்னடிக் கேஸ்களையும் பெறும்.
வூட் கிரேன் மேக்னடிக் ஹாஃப் பேக் கேஸ் ஆப்ஷன் ஆனது மரப்பட்டை போன்ற வடிவமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக உள்ள அராமிட் ஃபைபர் கேஸ் ஆப்ஷன் ஆனது ஒரு மெல்லிய ஆனால் நீடித்து உழைக்கும் ஒரு பொருளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168×1440 பிக்சல்ஸ், 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82-இன்ச் 2கே+ எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடன் 4.32ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் மூன்று வெவ்வேறு வகையான 50எம்பி கேமராக்களை கொண்டுள்ளது.
50எம்பி ப்ரைமரி கேமரா (1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ்) + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா (114° அல்ட்ரா-வைட் சென்சார், 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5செமீ மேக்ரோ சென்சார்) + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா (1/1.95-இன்ச் எல்ஒய்டி600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம்).
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஹசல்பிளாட் (Hasselblad) கேமரா செட்டப் ஆனது 4கே 60எஃப்பிஎஸ் வரை மற்றும் 8கே வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா (எப்/2.4 அபெர்க்ஷர், 4கே வரை 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்) உள்ளது
பேட்டரியை பொறுத்தவரை இது 100வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50வாட் வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், அகச்சிவப்பு சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? விலையை பொறுத்தவரை நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ரார் வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.67,000 முதல் ரூ.70,000 க்குள் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்படலாம். ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.50,000 க்குள் இருக்கும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








