Home
Mobile

ரெடியா இருங்க.. நல்ல வாரம் பொறக்குது.. ஜன.6-9.. அடுத்த 4 நாட்களில் 8 புது போன்கள் அறிமுகம்! என்னென்ன மாடல்?

2025 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஸ்மார்ட்போன்களின் விற்பனையானது தாறுமாறாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டில், 2025 ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் மொத்தம் 8 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. என்னென்ன மாடல்கள் எப்போது அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

ஜனவரி 6 - ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G): இது ரூ.10,000 க்குள் அல்லது அதற்கு நெருக்கமான விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டார்லைட் ப்ளூ (Starlight Blue), ஸ்டார்டஸ்ட் பர்பிள் (Stardust Purple) மற்றும் ஸ்டார்கேஸ் பிளாக் (Stargaze Black) ஆகிய கலர்களில் அறிமுகமாகும் என்பதை ரெட்மி உறுதிப்படுத்தியுள்ளது.

ஜன.6-9.. அடுத்த 4 நாட்களில் 8 புதிய போன்கள் அறிமுகம்!

டிசைன் மற்றும் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் பளபளப்பான பேனல்கள் மற்றும் பேக் பேனலில் மையமாக வைக்கப்பட்டு உள்ள வட்ட வடிவிலான கேமரா யூனிட்டையும், அதில் உள்ள மல்டிபிள் சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட்டையும் கொண்டிருக்கும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 50எம்பி ஏஐ கேமராவை கொண்டிருக்கும். மேலும் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் இதன் டிஸ்பிளே, நீல ஒளி உமிழ்வுகளுக்கான டியுவி ரைன்லேண்ட் சான்றிதழ், டியுவி ரைன்லேண்ட் ஃப்ளிக்கர் இலவச சான்றிதழ் மற்றும் சர்க்காடியன் சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.

எதிர்பார்க்கப்படும்அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரியை பேக் செய்யலாம். ஜனவரி 6 ஆம் தேதி நடக்கும் அறிமுகத்தை தொடர்ந்து, இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா (Amazon India) வழியாக விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 7 - ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் மற்றும் மோட்டோ ஜி04 (Moto G05): இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் ஆர்வலர்களும் எதிர்பார்க்கும் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் ஆனது ஜனவரி 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனுடன் சேர்த்து ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும்.

விலையை பொறுத்தவரை நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ராரின் (Tipster Yogesh Brar) கணிப்பின்படி, இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை ரூ.67,000 முதல் ரூ.70,000 க்குள் இருக்கும். மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999 முதல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் ஆகியவைகளைகொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் அதே நாளில் மோட்டோரோலா நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றும் இந்தியாவில் அறிமுகமாகிறது. இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் 3 மற்றும் வாட்டர் டச் டெக்னாலஜி உடனான 6.67-இன்ச் டிஸ்பிளே கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், 50எம்பி ப்ரைமரி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவிற்கான ஆதரவு, மீடியாடெக் ஹீலியோ ஜி81 எக்ஸ்ட்ரீம் சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பம், 18W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,200mAh பேட்டரி ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கும். இதன் விலை ரூ.10,000 க்குள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 9 - ஒப்போ ரெனோ 13 சீரீஸ் (Oppo Reno 13 Series) மற்றும் போக்கோ எக்ஸ்7 சீரீஸ் (POCO X7 Series): ஒப்போ ரெனோ 13 சீரீஸின் கீழ் மொத்தம் 2 மாடல்கள் அறிமுகமாகும்: ஒப்போ ரெனோ 13 மற்றும் ஒப்போ ரெனோ 13 ப்ரோ. முக்கிய அம்சங்களை பற்றி பேசுகையில், இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட், 50எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5800mAh பேட்டரி திறன் ஆகியவற்றை பேக் செய்யலாம்.

போக்கோ எக்ஸ்7 சீரீஸின் கீழ் மொத்தம் மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்: போக்கோ எக்ஸ்7 (POCO X7), போக்கோ எக்ஸ்7 ப்ரோ (POCO X7 Pro) மற்றும் போக்கோ எக்ஸ்7 ஐயர்ன் மேன் எடிஷன் (POCO X7 Iron Man Edition). விலையை பொறுத்தவரை, போக்கோ எக்ஸ்7 ப்ரோவின் விலை ரூ.30,000க்குள் இருக்கும். போக்கோ எக்ஸ்7 மாடலின் விலை ரூ.20,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 OnePlus 13R Redmi 14C 5G Moto G05 Oppo Reno 13 Poco X7 India Launch January 6 7 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X