நினைச்சத விட சீக்கிரமா.. ஜோடியா வரும் OnePlus 13, OnePlus 13R.. எப்போது? இந்திய விலையில் மாற்றம் இருக்குமா?
ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் உலகளாவிய அறிமுகத்திற்காக நீங்கள் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு 2 குட் நியூஸ்கள் உள்ளன. ஒன்று - ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. இரண்டாவது - ஒன்பிளஸ் 13 உடன் சேர்ந்து ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடலும் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது.
ஒன்பிளஸ் 13 - கடந்த மாதம் குவால்காமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் உடன் சீனாவில் அறிமுகமானது. இது இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளுக்கு வர எப்படியும் இன்னும் 1-2 மாதங்கள் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய இரண்டுமே அடுத்த சில வாரங்களில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

ஏனென்றால் ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய 2 மாடல்களுமே டிடிஆர்ஏ (TDRA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இது உலகளாவிய சந்தைகளில் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் உடனடி வெளியீட்டை உறுதிப்படுத்துகிறது.
மைஸ்மார்ட்ப்ரைஸ்-ன் (MySmartPrice) அறிக்கையின்படி ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய இரண்டும் முறையே CPH2653 மற்றும் CPH2645 என்கிற மாடல் நம்பர்களின் கீழ் டிடிஆர்ஏ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் 13 ஏற்கனவே அறிமுகமாகி விட்டதால், அதன் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. ஆனால் விலை நிர்ணயரில் சிறிய குழப்பம் நிலவுகிறது.
சீனாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடல் 4499 யுவான்களுக்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.53,150 க்கு அறிமுகமானது. ஆனால் இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 8ஜிபி ரேம் உடன் வரும் என்றும், அது ரூ.69,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிர்து
மறுகையில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள பிரீமியம் அம்சங்களின் விளைவாக இதன் ஆரம்ப விலை ரூ.77,000-ஐ தொடலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு தகவல்களில் எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இது 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்உடனான 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி 114° அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 6எக்ஸ் இன்-சென்சார் ஜூம், 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்,ஐபி68 + ஐபி69 ரேட்டிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கும்? இது 6.78 இன்ச் டிஸ்பிளே, 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம், 512ஜிபி வரையிலான யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 50எம்பி ப்ரைமரி சென்சார் + 8எம்பி செக்கண்டரி சென்சார் + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








