OnePlus 13, OnePlus 13R அறிமுகம் இன்று.. எத்தனை மணிக்கு? LIVE ஆக பார்ப்பது எப்படி?
அப்பாடா.. ஒருவழியாக ஜனவரி 7 ஆம் தேதி வந்துவிட்டது என்று பெருமூச்சு விடும் அளவிற்கு ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போன்களின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ், இன்று (2025 ஜனவரி 7) அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது
சொல்லப்போனால் இதுதான் 2025 ஆம் ஆண்டின் முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஒன்பிளஸ் 13 சீரீஸின் கீழ் இருக்கும் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய இரண்டுமே ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், இவ்விரு மாடல்களின் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை; விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்பது தான் ஒரே கேள்வி.

அந்த கேள்விக்கான பதில் இன்று நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போது தான் தெரிய வரும். இந்த வெளியீட்டு நிகழ்வை நீங்கள் நேரலையில் பார்க்க விரும்பினால்.. அதாவது ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய விரும்பினால், அது குறித்த விவரங்களும், ஒன்பிளஸ் 13 சீரீஸின் எதிர்பார்க்கப்படும் விலைகள் குறித்த தகவலும் இதோ:
ஒன்பிளஸ் 13 சீரீஸ் வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு நிகழ்வானது ஜனவரி 7 ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும். ஒன்பிளஸ் நிறுவனம் இதை "வின்டர் லான்ச் ஈவென்ட்" என்று அழைக்கிறது. இந்நிகழ்வு, ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
ஒன்பிளஸ் வின்டர் லான்ச் ஈவென்ட் 2025 இல் வேறு என்னென்ன ஒன்பிளஸ் தயாரிப்புகள் அறிமுகமாகும்? 2 புதிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து ஒன்பிளஸ் பட்ஸ் 3 ப்ரோ (OnePlus Buds 3 Pro) ஆனது ஒரு புதிய கலர் ஆப்ஷனை (சஃபையர் ப்ளூ) பெறுகிறது.
இதனுடன் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் வாட்ச் 3 (OnePlus Watch 3) மாடலையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலுக்கு அடுத்தபடியாக வரும் மாடலாகும் மற்றும் ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் மாடலுக்கு பிறகு இந்திய சந்தையில் அறிமுகமாகும் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் ஆகும்.
ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.67,000 முதல் ரூ.70,000 க்குள் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ .45,000 - ரூ.50,000 க்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 6.82-இன்ச் 2கே+ எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர், 50எம்பி + 50ம்பி + 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000எம்ஏஎச் பேட்டரி.
ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 16 ஜிபி வரை ரேம், OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா, ஐபி65 ரேட்டிங், 6400mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு.


Click it and Unblock the Notifications








