Home
Mobile

போனா வராது திரும்ப கிடைக்காது.. ரூ.12000 டிஸ்கவுண்ட்.. புது OnePlus போன் வாங்க சூப்பர் சான்ஸ்.. பிப்.16 வரை!

2025 ஆம் ஆண்டின் லேட்டஸ்ட் ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன்கள் எதுவென்று கேட்கவே வேண்டாம். அவைகள் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போன்கள் ஆகும், கடந்த ஜனவரி 2025 இல் அறிமுகமான இந்த 2 ஸ்மார்ட்போன்களும் ரூ.12,000 வரையிலான டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது.

இந்த டிஸ்கவுண்ட் பிப்.16 ஆம் தேதி வரை நடக்கும் ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையின் (OnePlus Red Rush Days Sale) கீழ் மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த விற்பனையின் போது, ​ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.5000 உடனடி தள்ளுபடி (Instant Cashback) கிடைக்கும். கூடவே ரூ.7,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் (Exchange Bonus) கிடைக்கிறது.

லேட்டஸ்ட் OnePlus போன் மீது பிப்.16 வரை ரூ.12,000 டிஸ்கவுண்ட்!

இப்படியாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மீது ரூ.12,000 வரை தள்ளுபடியை பெற முடியும். இதுதவிர பஜாஜ் ஃபின்சர்வ் (Bajaj Finserv) மற்றும் பிற முன்னணி கிரெடிட் கார்டுகளில் 24 மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கும். இதேபோல ​ஒன்பிளஸ் 13ஆர் மீது ரூ.3000 உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.7,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் என மொத்தம் ரூ.10,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது.

ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையின் கீழ் வேறு என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன? ஒன்பிளஸ் 12 மீது ரூ.4,000 ரூபாய் உடனடி வங்கி தள்ளுபடி சலுகை கிடைக்கிறது. இதோடு சேர்த்து ரூ.3,000 பிளாட் தள்ளுபடியையும் பெற முடியும். இந்த சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு பொருந்தும்

மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,000 வரை பிளாட் தள்ளுபடியின் கீழ் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் ரூ.4,000 வரை உடனடி வங்கி தள்ளுபடி சலுகையும் கிடைக்கும். மேலும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,000 பிளாட் தள்ளுபடி சலுகையுடன் வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite) ஸ்மார்ட்போன் மீது ரூ.2,000 வரையிலான வங்கி தள்ளுபடி சலுகை கிடைக்கிறது.

ஒன்பிளஸ் டேப்லெட்கள், பட்ஸ் மீதான சலுகைகள்: ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மீது ரூ.2,000 பிளாட் தள்ளுபடி கிடைக்கிறது மற்றும் ஒன்பிளஸ் பெட் கோ (OnePlus Pad Go) மீது ரூ.3,000 பிளாட் தள்ளுபடி கிடைக்கிறது. கடைசியாக ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) ஆனது ஒன்பிளஸ் ரெட் ரஷ் டே விற்பனையின் போது ரூ.1,000 தள்ளுபடி சலுகையின் கீழ் விற்கப்படும்

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி வைட் அங்கிள் கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 OnePlus 13R Gets Discounts up to Rs 12000 in Red Rush Days Sale Until February 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X