Home
Mobile

கொண்டாட போறாங்க! OnePlus 13 வெளியீட்டு தேதி.. எந்த விலை உயர்வும் இல்லாமல் 6000mAh பேட்டரி, 120-frame டிஸ்பிளே!

OnePlus 13 Launch Date: ஒருவழியாக ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலின் வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது. கடந்த பல வாரங்களாக எங்களுக்கு கிடைத்த லீக்ஸ் மற்றும் யூகங்கள் எல்லாமே உண்மையாகி உள்ளன. ஏனென்றால் எதிர்பார்த்தபடியே ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 2 மாதங்களுக்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒன்பிளஸ் 13 எப்போது அறிமுகமாகும்? இதில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது? இந்தியாவில் என்ன விலைக்கு வெளியாகும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 13 எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் சீனாவின் தலைவரான லூயிஸ் லீ (OnePlus China President Louis Lee), ஒன்பிளஸ் 13 அடுத்த மாதம் (அக்டோபர்) சீனாவில் அறிமுகமாகுமென்பதை உறுதிப்படுத்தியுள்ளார். வழக்கமாக ஒன்பிளஸின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் அறிமுகமாகி, பின்னர் ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனால் இம்முறை (2024) ஒன்பிளஸ் 13 ஆனது முன்கூட்டியே சீனாவிலும், அதை தொடர்நது இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது.

கொண்டாட போறாங்க.. OnePlus 13 வெளியீட்டு தேதி!

ஒன்பிளஸ் 13-ல் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது? லான்ச் டைம்லைன் உடன் சேர்த்து லூயிஸ் லீ, ஒன்பிளஸ் 13 ஆனது "சலேட்டஸ்ட் ஜெனரேஷன் ஃபிளாக்ஷிப் சிப்களில்" இயங்கும் என்பதையும் வெளிப்படுத்தி உள்ளார். இது - ஒன்பிளஸ் 13 ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4சிப்செட் (Snapdragon 8 Gen 4) உடன் வரலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

மேலும் லீ, இந்த ஸ்மார்ட்போன் தொழில்துறையின் முதல் 120-ஃபிரேம் "ஜென்ஷின் இம்பாக்ட்" அனுபவத்தை (Industry's first 120-frame "Genshin Impact" experience) கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார். வேகமான சிப்செட் மற்றும் 120-பிரேம் அனுபவத்துடன் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பவர்-பேக்கர் பெர்ஃபார்மராக இருக்கும் (குறிப்பாக கேமிங் ஆடியன்ஸ்ஸிற்கு) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொண்டாட போறாங்க.. OnePlus 13 வெளியீட்டு தேதி!

ஒன்பிளஸ் 13 வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் 13 ஆனது வழக்கமான சர்குலர் வடிவ கேமரா செட்டப்பில் இருந்து விலகி, புதுப்பிக்கப்பட்ட கேமரா வடிவமைப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒன்பிளஸ் 13-ன் ரியர் கேமராக்கள் செங்குத்தாக மேல்-இடது மூலையில் அடுக்கி வைக்கப்படலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் வரலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஆனது 2கே ரெசல்யூஷன் மற்றும் LTPO தொழில்நுட்பத்துடன் கூடிய 6.8-இன்ச் மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளேவை பேக் செய்யலாம். கூடவே மேம்படுத்தப்பட்ட அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் அறிமுகம் செய்யப்படலாம்.

கொண்டாட போறாங்க.. OnePlus 13 வெளியீட்டு தேதி!

பேட்டரியை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஆனது ஒரு பெரிய 6,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்று வதந்திகள் பரவுகிறது, இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் உள்ள 5400mAh பேட்டரியில் இருந்து கணிசமான அப்கிரேட் ஆகும். இருப்பினும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட்டின் ஆற்றல் தேவைகள் காரணமாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. அதிகரித்த ஆற்றல் தேவைகளை ஈடுசெய்ய ஒரு பெரிய பேட்டரியை சேர்க்க ஒன்பிளஸ் முடிவு செய்து இருக்கலாம்.

ஒன்பிளஸ் 13 இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த 2024 ஜனவரி மாதம் அறிமுகமானது, இதன் ஆரம்ப விலை ரூ.64,999 ஆகும். வரவிருக்கும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனும் கூட இதே வரம்பில் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று ஊகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் சேர்க்கப்படும் புதிய அம்சங்கள் அல்லது மேம்படுத்தல்கள் ஒரு சிறிய அளவிலான விலை உயர்விற்கு வழிவகுத்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Best Mobiles in India

English summary
OnePlus 13 October Launch Confirmed See Confirmed Specifications Expected Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X