OnePlus போனில் சைலன்ட் ஆக சேர்க்கப்பட்ட Night Mode.. உடனே ட்ரை பண்ணுங்க.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது இன்ஸ்டாகிராம் (Instagram) நிறுவனத்துடன் உடன் கூட்டு சேர்ந்து, லேட்டஸ்ட் ஒன்பிளஸ் மாடல் ஒன்றிற்கு புதிய நைட் மோட் அம்சத்தை (New Night Mode Feature) கொண்டு வந்துள்ளது. அதென்ன மாடல்? இந்த புதிய நைட் மோட் எப்படி வேலை செய்யும்? இதோ விவரங்கள்:
எந்த மாடலில் புதிய நைட் மோட் சேர்க்க்கப்பட்டுள்ளது? அது ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது ஒன்பிளஸ் 13 பயனர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள இன்-ஆப் கேமராவைப் பயன்படுத்தி படங்களை எடுக்கும்போது, பில்ட்-இன் கேமரா ஆப்பில் இருந்து புதிய நைட் மோட்-ஐ பயன்படுத்தலாம்.

தற்போதைக்கு இந்த அம்சம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கு மட்டும் பிரத்யேகமாக இருக்குமா அல்லது ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) அல்லது கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போன்ற மாடல்களுக்கும் கொண்டுவரப்படுமா என்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை.
ஒன்பிளஸ் 13-க்கான இன்ஸ்டாகிராம் நைட் மோட் எப்படி வேலை செய்யும்? ஒன்பிளஸ் 13 வைத்துள்ள பயனர்கள், தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இன்ஸ்டாகிராம் ஆப்பை அதன் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும். பின்னர் இன்ஸ்டாகிராமில் உள்ள இன்-ஆப் கேமராவில் புதிய மூன் ஐகானை காண்பீர்கள். இந்த ஐகான் - நைட் மோட் ஆனது தானாகவே இயக்கப்பட்டிருப்பதை குறிக்கிறது மற்றும் லோ-லைட் புகைப்படங்களை எடுக்க ஒன்பிளஸ் 13 தயாராக உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
நைட் மோட் இயக்கப்பட்டதும், பயனர்கள் ஷட்டர் பட்டனை கிளிக் செய்யலாம். பின்னர் கேமரா ஆப் குறிப்பிட்ட படத்தை கேப்சர் செய்யும் போது, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை ஓரிரு வினாடிகள் 'ஸ்டில்' ஆக வைத்திருக்கவும். இமேஜ் செயலாக்கப்பட்டதும், அதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்யலாம் அல்லது போஸ்ட் செய்யலாம்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி. இன்ஸ்டாகிராமின் இன்-ஆப் கேமராவானது, பில்ட்-இன் கேமரா ஆப்பில் கிடைக்கும் நைட் மோட்-ஐ பயன்படுத்தும் போது கிடைக்கும் அதே மல்டி-ஃபிரேம் செயலாக்கத்தை பயன்படுத்தும். இதன் மூலம் நல்ல லோ லைட் புகைப்படங்களைப் பிடிக்க, இன்ஸ்டாகிராம் ஆப்பில் இருந்து, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பில்ட்-இன் கேமராவிற்கு மாற வேண்டிய அவசியம் நீக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.69,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கும்.
இதேபோல 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.76,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் ரூ.71,999 க்கு வாங்க முடியும். கடைசியாக 24ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.89,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கும்.
இது 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது - 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் 50எம்பி கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா. முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








