கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. OnePlus 13 Mini-யில் இவ்ளோ பெரிய பேட்டரி-ஆ.. என்ன விலை? எப்போது அறிமுகம்?
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு, கூடிய விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போன் ஒரு நல்ல உதாரணமாகி விடும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) ஸ்மார்ட்போனில் பேக் செய்யப்படவுள்ள பேட்டரி கெப்பாசிட்டி அப்படி!
கடந்த வாரம், டிப்ஸ்டர் டிஜிட்டல் அரட்டை ஸ்டேஷன் வழியாக வெளியான அறிக்கையானது, ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனை வருகிற ஏப்ரல் 2025 இல் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறியது. தற்போது ஒன்பிளஸ்-ன் இந்த சிறிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை பற்றிய கூடுதல் விவரங்களை டிப்ஸ்டர் வெளிப்படுத்தியுள்ளார்.

டிஜிட்டல் அரட்டை ஸ்டேஷனின் சமீபத்திய அறிக்கையானது, ஒன்பிளஸ் 13 மினி சிறியதாக இருந்தாலும் அது 6000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறுகிறது. மேலும் ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ ஆகியவை இரண்டுமே வரவிருக்கும் ஸ்மாட்போன்களில் 6500mAh முதல் 7000mAh வரையிலான பெரிய பேட்டரிகளில் வேலை செய்வதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன்கள் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும்.
முன்னதாக வெளியான லீக்ஸ்படி, ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போன் ஆனது 1.5K ரெசல்யூஷன் உடனான குறுகிய பெசல்களால் சூழப்பட்ட 6.3-இன்ச் அளவிலான OLED OLED LTPO டிஸ்பிளேவை கொண்டிருக்கும். கேமராக்களை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 906 ப்ரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை உள்ளடக்கவுஞ் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.
சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டிருக்கும். கூடவே வயர்லெஸ் சார்ஜிங், ஆப்டிகல் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் மற்றும் கிளாஸ் பேக் ஆகிய முக்கிய அம்சங்களையும் பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை இது ரூ.49,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏப்ரல் 2025 ல் வெளியாகும் பட்சத்தில், விரைவில் இந்த ஸ்மார்ட்போனை பற்றிய கூடுதல் விவரங்கள் வெளிவரும்.
சமீபத்தில் சீனாவில் ஒப்போ ஃபைண்ட் என்5 ஆக அறிமுகம் ஸ்மார்ட்போன் உலகளவில் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஆக வரும் என்கிற அனைத்து ஊகங்களுக்கும் ஒன்பிளஸ் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் 2025 ஆம் ஆண்டில் எந்தவிதமான போல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதில்லை என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆடு அக்டோபர் மாதம் அறிமுகமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் மாடலின் அடுத்த வெர்ஷன் எப்போது அறிமுகமாகும் என்கிற கேள்விக்கு ஒப்போ பைண்ட் என்5 - ஒரு பதிலாக இருந்தது ஏனென்றால் ஒப்போ பைண்ட் என்3 ஸ்மார்ட்போனிற்கும் ஒன்பிளஸ் ஓப்பன் மாடலுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ள
இதன் விளைவாக ஒப்போ பைண்ட் என்5 ஸ்மார்ட்போனின் அறிமுகம் அறிவிக்கப்பட்ட வேகத்தில் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனும் வருகிறது என்கிற யூகங்கள் கிளம்பின. ஆனால் போல்டபிள் ஸ்மார்ட்போன் விஷயத்துல தான் வாங்கிய அடியை இன்னும் மறக்கவில்லை என்பது போல் தெரிகிறது. ஒப்போ பைண்ட் என்5 ஸ்மார்ட்போனிற்கும் ஒன்பிளஸ் ஓப்பன் 2 மடலுக்கும் சம்பந்தம் இல்லை; 2025 இல் போல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஐடியாவே இல்லை என்று ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
ஒப்போ ஃபைண்ட் என்5 பிப்.20 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உலகின் மிக மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்று ஒப்போ டீஸ் செய்து வருகிறது. இப்போதைக்கு மிகவும் மெலிதான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக ஹானர் மேஜிக் வி3 (Honor Magic V3) உள்ளது. ஹானரின் இந்த ஸ்மார்ட்போன் விரிக்கப்படும் போது 4.35மிமீ அளவுடையதாக இருக்கிறது மற்றும் மடிக்கும்போது 9.2மிமீ அளவைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








