Home
Mobile

OnePlus 13 Mini.. அட இது நம்ம LIST-லயே இல்லையே.. 6.31-இன்ச் OLED டிஸ்பிளே, 50MP கேமரா, SD 8 Elite சிப்செட்!

ஒட்டுமொத்த ஒன்பிளஸ் ரசிகர்களும் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்திற்காக காத்திருக்கும் வேளையில், நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக.. ஒரு புதிய மற்றும் சிறிய அளவிலான ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்த டிப்ஸ்டர், குறிப்பிட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் மோனிக்கரை (மாடல் பெயரை) வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட, அது ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) மாடலாக அல்லது ஒன்பிளஸ் 13டி 5ஜி (OnePlus 13T 5G) ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

OnePlus 13 Mini.. அட இது நம்ம LIST-லயே இல்லையே!

சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸின் (OnePlus Ace 5 Series) அறிமுகத்திற்கு முன்பாகவே, ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு சிறிய ஃபிளாக்ஷிப் போனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அதுகுறித்து நம்பகமான லீக்ஸ் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ளது

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனின் நான்கு பக்கங்களிலும் குறுகிய பெஸல்கள் இருக்கலாம். இதில் 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.31-இன்ச் அளவிலான எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம். இதன் டிஸ்பிளேவானது ஷார்ட்-ஃபோகஸ் இன்-ஸ்கிரீன் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரை பேக் செய்யலாம்

ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனின் கேமராக்களை பொறுத்தவரை ரியர் கேமரா செட்டப்பில் 50-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்906 ப்ரைமரி கேமரா + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகள் இடம்பெறலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை போலவே ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இது ஒரு மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக்கை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் மீதமுள்ள அம்சங்கள் குறித்த விவரங்கள் இல்லை.

ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனிற்கும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 மினி ஸ்மார்ட்போனிற்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 8 மினி ஸ்மார்ட்போன் ஆனது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ராவுடன் சேர்த்து 2025 மார்ச் மாதத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கேமரா மற்றும் சிப்செட் போன்ற சில துறைகளில் மட்டுமே ஒன்பிளஸ் 13 மினி மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 மினி ஆகிய இரண்டிற்கும் வேறுபாடுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 மினி ஸ்மார்ட்போனில் டைமன்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 Chipset) பேக் செய்யப்படலாம்

கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 மினி மாடலில் 50 மெகாபிக்சல் ஐஎம்எக்ஸ்9 சீரிஸ் ப்ரைமரி கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் ஹை குவாலிட்டி பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 மினி ஸ்மார்ட்போன் ஆனது வயர்லெஸ் சார்ஜிங்கை (Wireless Charging) ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.31-இன்ச் எல்டிபிஓ ஓஎல்இடிபேனல், மெட்டல் மிடில் ஃப்ரேம் மற்றும் கிளாஸ் பேக் ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 மினி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது சுமார் ரூ.50,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஒன்பிளஸ் 13 மினி மாடல் அறிமுகமாகும் பட்சத்தில், அதன் விலை நிர்ணயமும் கூட இதை போலவே இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 Mini or OnePlus 13T Specifications Leaked Similarities with Oppo Find X8 Mini
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X