Home
Mobile

வாடா என் குட்டி செல்லம்! OnePlus 13 Mini.. OLED டிஸ்பிளே, பெரிஸ்கோப் கேமரா, வயர்லெஸ் சார்ஜிங்! எப்போ அறிமுகம்?

ஒன்பிளஸ் நிறுவனமானது, ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களுடன் அதன் ஒன்பிளஸ் 13 சீரீஸை முடித்துக் கொள்ளாது என்பது போல் தெரிகிறது. இந்த சீரிஸில் ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) என்கிற மாடல் அறிமுகமாகும் என்று, ஒன்பிளஸ் 13 அறிமுகத்திற்கு முன்பில் இருந்தே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதுகுறித்த சரியான விவரங்கள் எதுவும் வெளியாகாமலேயே இருந்தது. தற்போது ஒன்பிளஸ் 13 மினி மாடலின் லான்ச் டைம்லைன் (அதாவது எந்த மாதத்தில் அல்லது எந்த காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற விவரம்) வெளியாகி உள்ளது. கூடவே டிஸ்பிளே, சிப்செட், கேமரா மற்றும் பேட்டரி குறித்த முக்கிய அம்சங்களும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

OnePlus 13 Mini.. OLED டிஸ்பிளே, பெரிஸ்கோப் கேமரா.. எப்போது அறிமுகம்?

முன்னதாக வெளியான அறிக்கைகள், ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு சிறிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வேலை செய்வதாகவும், அது ஒன்பிளஸ் 13 மினி என்று அழைக்கப்படலாம் என்றும், ஒன்பிளஸ் 13 மினி ஆனது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 மினி உடன் பல ஒற்றுமைகளை பகிர்ந்து கொள்ளக்கூடும் என்று மட்டுமே பரிந்துரைத்தன.

இதற்கிடையில் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான ஸ்மார்ட் பிகாச்சு வழியாக ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனின் பெரும்பாலான முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கிடைக்கப்பட்ட தகவலின்படி ஒன்பிளஸ் 13 மினி ஆனது 6.3 இன்ச் அளவிலான ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது LTPO டெக்னாலஜி உடனான ஆதரவு மற்றும் 1.5கே ரெசல்யூஷன் உடன் வரும்; நான்கு பக்கங்களிலும் குறுகிய பெசல்களை கொண்டிக்கும்

கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். அதில் 50 மெகாபிக்சல் சோனி IMX906 ப்ரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம். ஒன்பிளஸ் 13 மினி மாடலில் ஆப்டிகல் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 மினி மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். அதே நேரத்தில் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 மினி மாடல் ஆனது டைமன்சிட்டி 9400 சிப்பை கொண்டிருக்கலாம்.கடைசியாக, ஸ்மார்ட் பிக்காச்சு வழியாக கிடைத்த லீக் ஆனது ஒன்பிளஸ் 13 மினி ஆனது வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது; ஆனால் பேட்டரி அளவு குறித்து எந்த தகவலையும் கொடுக்கவில்லை.

ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போன் ஆனது இந்த 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2025 ஏப்ரல் - ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம். தற்போது வரையிலாக இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை. அதாவது இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா அல்லது சீனாவிற்கு பிரத்யேகமானதாக இருக்குமா என்பதில் தெளிவு இல்லை.

சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம்: இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.42,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இது 2 கலர் ஆப்ஷன்களில் (ஆஸ்ட்ரல் டிரெயில் மற்றும் நெபுலா நொயர்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.69,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.76,999 க்கும், ஹை-எண்ட் 24ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் ரூ.89,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களாக இருந்தாலும் கூட ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய 2 மாடல்களின் மீதுமே ஆபர்கள் கிடைக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 Mini Major Specifications Tipped Again Expected to Launch in Second quarter of 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X